Kidny

Kidny

வடக்கு முதல்வருக்கு ஆதரவு வழங்கும் வகையில் வடக்கு தழுவிய பூரண ஹர்த்தால் ஆரம்பம். (படங்கள்)

-பாறுக் ஷிஹான்-

வடக்கு முதல்வருக்கு ஆதரவு வழங்கும் வகையில் வடக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்தமைக்கு அமைய  இன்று (16) வெள்ளிக்கிழமை  யாழ்  மாவட்டம்  முழுவதுமாக நிர்வாக முடக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய   தூர பேரூந்து சேவைகள் தவிர்ந்த ஏனைய உள்ளூர் பேரூந்து சேவைகள் நடைபெறவில்லை    பாடசாலைகள்  மூடப்பட்டிருந்ததுடன்  பூரண கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதே வேளை ஒரு சில தனியார் உள்ளூர் பேரூந்து சேவைகள் இயங்கி வருவதுடன் யாழ் நகரில் பொலீஸ் விசேட அதிரடி படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு முதல்வருக்கு ஆதரவு வழங்கும் வகையில் வடக்கு தழுவிய பூரண ஹர்த்தால் ஆரம்பம். (படங்கள்) வடக்கு முதல்வருக்கு ஆதரவு வழங்கும் வகையில் வடக்கு தழுவிய பூரண ஹர்த்தால் ஆரம்பம். (படங்கள்) Reviewed by Madawala News on 6/16/2017 10:29:00 AM Rating: 5