tg travels

மனநல ஆலோசகர் சாபிர் ஹாஷிம் விஷேட உரையுடன் இடம்பெற்ற உக்குவல ஹிஜ்ரா நலன்புரி சங்க இப்தார்.


நேற்று 04.06.2017 அன்று ஹிஜ்ரா நலன்புரி சங்கம் மட்டும் ஹிஜ்ரா விளையாட்டுக்கழம் ரைத்தலாவெல,உகுவெல இனால் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் முறையே  மன நல ஆலோசகர் சாபிர் ஹாஷிம் அவர்களினால் குறிப்பாக வாலிபர்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்களுக்கான விஷேட உரையும் அதனை தொடர்ந்து இப்தார் நிகழ்வும் அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் முக்கிய ஆலிம் பெருந்தகைகள் , மாவட்ட மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் , சுமார் 100 முச்சக்கர வண்டி சாரதிகள் , பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் , ஊர் ஜமாத்தார்கள் , மாத்தளை க்குட்பட்ட விளையாட்டுக்கழக நிர்வாகிகள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகள் , நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் விபத்துக்களை குறைக்க  முச்சக்கர வண்டி சாரதிகளின் பங்களிப்பு என்ன ? என்ற தலைப்பில் மாத்தளை போலீஸ் பிரிவு அதிகாரிகள்   உரையாற்றினர்..

மற்றும் ஷாபிர் ஹாஷிம் அவர்களினால் போதை வஸ்துக்களில் இருந்து இளைஞர்கள்  தம்மை பாதுகாப்பது எப்படி , இதட்கு பெற்றோர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தார்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது  பற்றி உரையாற்றப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்கும் , இப்தாருக்கும் உடலாலும் , பொருளாலும் , பணத்தாலும், ஆலோசனையாலும்  பாடுபட்ட அத்துணை அங்கத்தவர்களுக்கும் ஹிஜ்ரா நலன்புரி சங்கம் இங்ஙனம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
மனநல ஆலோசகர் சாபிர் ஹாஷிம் விஷேட உரையுடன் இடம்பெற்ற உக்குவல ஹிஜ்ரா நலன்புரி சங்க இப்தார். மனநல ஆலோசகர் சாபிர் ஹாஷிம் விஷேட உரையுடன் இடம்பெற்ற உக்குவல ஹிஜ்ரா நலன்புரி சங்க இப்தார். Reviewed by Madawala News on 6/05/2017 09:24:00 PM Rating: 5