Ad Space avaiable

பாதிக்கபட்ட மக்களுகாக நண்பர்கள் எடுத்த முயற்சி.. ( படங்கள் இணைப்பு)


அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள
கொடிகம எனும் பிரதேசத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கபட்டபோதும் இம் மக்களுக்கான போதிய நிவாரணம் வந்து சேரவில்லை என்று அறியக்கிடைத்தது.

மூவின மக்களும் செறிந்து வாழும் இப்பிரதேச மக்களுக்காக அஸீம் ஜவ்பர் மற்றும் இம்ரான் நெய்னார் ஆகியோர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில் பெயர் குறிப்பட விரும்பாத ஒரு தணவந்தர் பெரும்தொகை பணம் வழங்கியதோடு சில குறிப்பிட்ட முகநூல் நண்பர்களிடம் பெற்றுக்கொண்ட நிதியின் மூலம்  நிவாரண பொதிகளை வழங்கினர்.

இப்பொதிகளில் சுமார்  4000/- பெறுமதியான உலர் உணவு பொதிகள் எழுபதும் (70) 10kg அரிசி பொதி எண்பத்தைந்தும் (85)
இன்று பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டு கொடிகமயில் அமைந்துள்ள  அல் இஸ்ஸத்துல் அஸிஸியா பள்ளிவாசல் நிர்வாகிகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பயனாளிகளின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது.



பாதிக்கபட்ட மக்களுகாக நண்பர்கள் எடுத்த முயற்சி.. ( படங்கள் இணைப்பு) பாதிக்கபட்ட மக்களுகாக நண்பர்கள் எடுத்த முயற்சி.. ( படங்கள் இணைப்பு) Reviewed by Madawala News on 6/04/2017 01:28:00 PM Rating: 5