Kidny

Kidny

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சூனியம் செய்தது சிக்கியது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சூனியம் செய்ததாக கூறப்படும் செப்புத் தாள்களை இரு இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

அநுராதபுரம் - கெப்பதிகொல்லாவ பிரதேசத்திலேயே இந்த செப்புத் தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செப்புத் தாள்களில் ஜனாதிபதியின் பெயருடன், அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் மூன்று சகோதரர்களின் பெயர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் பெயர்களுடன் மேலும் ஒருவரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த செப்புத் தாள்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த இளைஞர்களிடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

பதவிய – கெப்பதிகொல்லாவ பிரதான பாதைக்கு அருகில் உள்ள உஸ்கல்ல மயானத்தில் இருந்து இந்த செப்புத் தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் மற்றும் அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களின் வரைபடங்களும் அந்த செப்புத் தாள்களில் பொறிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சூனியம் செய்தது சிக்கியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சூனியம் செய்தது சிக்கியது. Reviewed by Madawala News on 6/14/2017 12:12:00 PM Rating: 5