Kidny

Kidny

இம்முறை ஜனாதிபதி, பிரதமரின் இப்தார்களை பகிஷ்கரிப்போம்.


1988ல் என நினைக்கிறேன்,
ஜனாதிபதி பிரேமதாஸாவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதென்றால் புலிகளின் அச்சுறுத்தலால் கொழும்பில் வந்து தஞ்சமடைந்துள்ள 200 மேற்ப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு வேண்டிய தங்குமிடம், உணவு, உடை வசதிகள் உடணடியாக செய்து கொடுக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையை  முஸ்லிம் காங்கிரஸ் எழுத்து மூலமாக முன்வைத்தது.

அன்று மதியமே பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல எம்மை தொடர்பு கொண்டு  தஞ்சமடைந்திருப்போருக்கு பொருத்தாமான இடத்தை தேர்வு செய்யுங்கள் அதற்குரியதும் மேலுமான உணவு, உடைகளுக்குமான செலவுகளையும் பாதுகாப்பு அமைச்சிலிருந்து தருகிறோம் என்று கூறினார்.
ஜாவத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையிலிருந்த ஒரு இடத்தை தேர்வு செய்து விபரத்தை ஜெனரலுக்கு அறிவித்தேன்.

இரண்டு மணித்தியாலங்களுக்குள் அவ்விடத்துக்கு தொலை பேசி இணைப்பு வழங்கி இரண்டு நாட்களுக்கு தேவையான உணவுக்கான செலவுப்பணத்தையும் ஏற்பாடு செய்து தந்தார்.

நிலைமைகள் ஓரளவு சீராகும் வரை பல மாதங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுசரனையுடன் இளைஞராகள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

சுமார் இரண்டு மாதங்களாக எமது தொடர் வேண்டுகோள்களை செவிமடுக்காத அன்றைய புலிகள் சார்பான பிரேமதாசாவின் அரசாங்கம் சர்வகட்சி மாநாடென்ற பொறிக்குள் வைத்து நாம் கேட்டதை சில மணித்தியாலங்களுக்குள் செய்து தந்தது.

புலிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரும்  என்பதற்காய் புலிகளால் அச்சுறுத்தப்பட்டவர்கள் என்ற அடையாளத்துடனான அகதிகள் என்ற  அங்கீகாரத்தை அதுவரை உத்தியோகபூர்வமாக ஏற்க மறுத்துக்கொண்டிருந்த அரசாங்கம் சர்வ கட்சி மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் கலந்து கொள்ளாமல் விடுவதால் ஏற்படவிருக்கும் அவமானத்தையும்  சர்வதேச ரீதியான கண்ணோட்டத்தையும் புலிகளுக்கும் புரியவைத்து  தனது நிலைப்பாட்டை தழர்த்திக்கொண்டதன் பயனாக அல்லோலப் பட்டுக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு ஓரளவு ஆறுதலைப்  பெறறுக்கொடுக்க எமது நிபந்தனை கைகொடுத்தது என்பது வரலாறு.

ஜனாதிபதி, பிரதமர்களின் இப்தார் நிகழ்வுகள் சர்வ கட்சி மாநாடு போன்று முக்கியத்துவமிக்கதொன்றல்ல,

என்றாலும் பலநாட்டு தூதுவர்களும் அழைக்கப்படும் நிகழ்வென்பதால் இந்நாட்டு முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளாமல் விடுவது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை.

அன்று புலிப் பயங்கரவாதம், இன்று காவிப் பயங்கரவாதம். இதுவே வித்தியாசம். இரண்டுக்கும் ஆட்சியாளர்கள் அஞ்சுவதே ஒற்றுமை.

முஸ்லிம் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்துக்காக பலகாலமாய் தொடர்ந்து நடைபெற்றுவரும் இப்தார் நிகழ்ச்சியை ஜனாதிபதியும் பிரதமரும் கைவிட்டாலும், அதுவும் ஏன் என்ற கேள்விகளை தூண்டும்.

அதுவே பாரிய வெற்றியாகும்.

ஆட்சிமாற்றம், இராஜினாமாக்கள்  மட்டுமே எமது வழிமுறைகலல்ல. இப்படியான  பொறி முறைகளையும் நாம் நழுவ விடக்கூடாது.

தவிரவும் சுதந்திர தினம் போன்ற ஒரு நாட்டுப்பற்றை பிரதிபலிக்கும் நிகழ்வுமல்ல இப்தார் நிகழ்ச்சிகள்.

ஆகவே கட்சிபேதம் பாராது முஸ்லிம்கள் எல்லோரும் ஜனாதிபதி, பிரதமர்களின் இப்தார் நிகழ்ச்சிகளை முழுமையாக புறக்கணித்து எமது சமூகத்தின் ஒட்டுமொத்த மன நிலையை வெளிப்பாடுத்துவோம்.

இதையும் தாண்டி உங்கள் தனிப்பட்ட இலாபங்களுக்காக தனிப்பட்டோரை திருப்திப்படுத்த விரும்பினால் உங்களை தெரிவு செய்த மக்களே உங்களுக்கான தீர்ப்புக்களை எழுதட்டும்

-வபா பாறுக்-
CEO
Institution of Definition
இம்முறை ஜனாதிபதி, பிரதமரின் இப்தார்களை பகிஷ்கரிப்போம். இம்முறை  ஜனாதிபதி, பிரதமரின் இப்தார்களை பகிஷ்கரிப்போம். Reviewed by Madawala News on 6/03/2017 11:58:00 AM Rating: 5