tg travels

இந்திய முஸ்லிம்கள் மீது மிக பெரிய வெறுப்பை காட்டிய மோடி அரசு.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

ஜனாதிபதி பிரணப் முகர்ஜியின் இறுதி இஃப்தார் நிகழ்ச்சியை பாஜக புறக்கணித்ததற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் வழக்கமான நிகழ்வாக ஒவ்வொரு வருடமும் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவதுண்டு. அது இவ்வருடமும் நடத்தப்பட்டது. இவ்வருட நிகழ்ச்சி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் இறுதி நிகழ்ச்சியாகும்.

இதில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் மோடியிலிருந்து பாஜக அமைச்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாஜகவினர் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர் கட்சியினர். ஜனாதிபதியையும் முஸ்லிம்களையும்  அவமதிக்கும் செயலை பாஜக செய்துள்ளது.

இதற்கு பாஜக இதற்கு விளக்கம் அளித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய முஸ்லிம்கள் மீது மிக பெரிய வெறுப்பை காட்டிய மோடி அரசு. இந்திய முஸ்லிம்கள் மீது மிக பெரிய வெறுப்பை காட்டிய மோடி அரசு. Reviewed by Madawala News on 6/25/2017 05:54:00 PM Rating: 5