tg travels

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப சேவைசார் பயிற்சி.


ஜப்பான் தொழில்நுட்ப சேவைசார் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை தொழில்நுட்ப சேவைசார் பயிலுனர்களுக்கும் வாய்ப்பளிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல குறித்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இலங்கை தொழில்நுட்ப சேவைசார் பயிலுனர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப சேவைசார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் வாய்ப்பளிப்பதற்காக ஜப்பானில் புகழ்பெற்ற மனித வள அபிவிருத்தி நிருவனத்துடன் International Manpower Development Organization (IM Japan) குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப சேவைசார் பயிற்சி. இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப சேவைசார் பயிற்சி. Reviewed by Madawala News on 6/28/2017 02:07:00 PM Rating: 5