tg travels

முதல்வரின் வீடு முன்னால் திரண்ட மக்கள் வெள்ளம். (படங்கள் இணைப்பு)

பாறுக் ஷிஹான்-

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் முருகன் கோவிலுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று    இன்று(16)முன்னெடுக்கப்பட்டுள் ளது.

தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக "தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வரின் வீடு முன்னால் திரண்ட மக்கள் வெள்ளம். (படங்கள் இணைப்பு) முதல்வரின் வீடு முன்னால் திரண்ட மக்கள் வெள்ளம். (படங்கள் இணைப்பு) Reviewed by Madawala News on 6/16/2017 02:08:00 PM Rating: 5