Kidny

Kidny

மறக்க முடியாத மனிதர் டாக்டர் இஸ்மாயில். எம்மை விட்டு சென்று இன்றுடன் ஒரு வருடம்.


கண்டியில் நீண்டகாலமாக வைத்தியச் சேவையுடன் சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு அண்மையில் காலமான டாக்டர் இஸ்மாயில் அவர்களது (12.6.2016) முதலாவத வருட நினைவு தினம் இன்றாகும்.

 அது தொடர்பாக செங்கொடிச்சங்கம் பின்வரும் செய்தியை விடுத்துள்ளது.

வைத்தியத் துறையில் வல்லுனரான டாக்டர்  இஸ்மாயில் அவர்கள் எம்மைவிட்டு பிரிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இவரை போன்ற வைத்தியர்களை இன்று கண்டு பிடிப்பது மிகவும் கடுமையான ஒரு செயலாகும்.

பொதுவாக படித்துப்பட்டம் பெற்று வைத்தியராக மாறியவுடன் சமூகத்தில் உள்ள வறியமக்களுடன் இவர்களது தொடர்பிலும் உறவு முறையிலும் ஒரு பாரிய விரிசல் ஏற்படுவதை இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் டாக்டர் இஸ்மாயில் இன, மத, பால், மொழிகளுக்கு அப்பால் மற்றவர்களுடைய பிரச்சினையை தனது பிரச்சினையாக பார்த்து அதற்கான தீர்வு கிடைக்கும் வரை செயற்படுபவர் என்பது அவருடன் நெருங்கி பழகியவர்களு;கு நன்கு தெரியும்.


வைத்தியத்துறையை வியாபாரமாக மாற்றும் இந்த காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எமக்கு டாக்டர் இஸ்மாயில் போன்ற சமூக வைத்தியர்களின் தேவை அதிகமாக உள்ளது. டாக்டர் இஸ்மாயில் தனக்கு தெரிந்த பல விடயங்களை மற்றவர்களும் அறிய வேண்டும் என்ற சிந்தனையில் எப்போதும் தனது அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்பவர்.

மிகவும் எளிமையாக காணப்பட்ட இவரை, யார் வேண்டுமானாலும் இலகுவாக அணுக கூடியதாகவும் இருந்தது. இவரின் வாழ்க்கையில் பல பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கம் வைத்தியத்துறையில் அவர் வல்லுனர் என்பதாகும். அதிகமானோருக்கு தெரியாத மற்றொரு பக்கம் என்ன வெனில் இவருக்கும் சமூகத்திற்கும், குறிப்பாக வறியமக்களுக்கும் இடையே இருந்த தொடர்பாகும்.

இது ஒரு மகத்தான விடயம். இவ்வகையான மகான்களின் உண்ணத சேவைகளை உலகம் கட்டாயம் அறிய வேண்டும். அறிவதோடு மட்டுமல்ல ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுனர்கள் எப்படி தங்களுடைய திறனை பயன்படுத்தி சாதாரண மக்கள் நீதியை பெற உதவுவது என்ற படிப்பிiனையை பெற்று, அவர்களும் சமூகவைத்தியர்களாக, வழக்கறி;ஞர்களாக, ஆசிரியர்களாக மாறவேண்டும்.

டாக்டர் இஸ்மாயில் அவர்களது பணியில் ஒரு சிறிய உதாரணத்தை நினைவு படுத்த விரும்புகிறோம். அதாவது-

 2000ம் ஆண்டு இலங்கையில் மரபணு சோதணைகள் பற்றி போதிய வசதிகள் இல்லாத காலம். ஒரு இளம் தொழிலாளி வர்கப் பெண் ஒருவர் ஏற்கனவே திருமணம் முடித்து இருந்த போதும் வேறு ஒரு ஆணால் அவள் ஏமாற்றப்பட்டாள்.

அவளது வைற்றில் வளர்ந்த குழந்தைக்கு தான் காரணம் இல்லை என அந்த ஆண் கூறிவந்தான், அத்துடன் அப் பெண்ணை தனிமைப்படுத்திவிட்டான்.

ஆனால் இப் பெண்ணின் வைற்றில் வளர்ந்த குழந்தைக்கு தந்தை அந்த ஆண் தான் என்பதை டாக்டர் இஸ்மாயில் நிரூபித்து அப் பெண்ணுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முக்கிய காரணமாக இருந்தார்.

டாக்டர் இஸ்மாயில் இலங்கையில் அக் காலப்பகுதியில் மரபணு பரிசோதனை அறிமுகமாகவில்லை. ஆனால் டாக்டர் இஸ்மையில் அவர்கள் அப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு ஊடாக மரபணு பரிசோதனையை செய்து அவுஸ்திரேலியா பல்கலைகழகத்துடன் தொடர்பு கொண்டு இப் பரிசோதனையை மேற்கொள்ள உதவி செய்தார்.

அப் பரிசோதனையின் குறிப்பிட்ட ஆண் அக் குழந்தையின் தந்தை என்பது நிரூபிக்கப்பட்டது.

இதன் விளைவாக அந்த இளம் தோட்டத் தொழிலாள பெண்ணுக்கு நியாயம் கிடைத்தது.

இச் செய்கையில் இவர் ஒரு தொழில் முறைவைத்தியர் என்பதற்கு அப்பால் ஒரு சமூக வைத்தியராக உயர்ந்து நின்றார்.

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தனி நபர்களுக்கும் சரி, குழுவினருக்கும் சரி தனது அறிவின் திறமையை பயண்படுத்தி நீதியை பெற்றுக் கொடுத்துள்ளார். இவர் அமைதியாக அடுத்தவர்களுக்கு தெரியாமல் செய்த உதவிகள் பலரது மனங்களை கவர்ந்துள்ளது. இவர் மறக்கப்படமுடியாத ஒரு மாமனிதர். இவர் இன்று எம்மோடு வாழாவிட்டாலும் இவரது பணிகளின் காரணமாக இன்றும் மக்களுடைய மனங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.

-ஜே.எம்.ஹபீஸ் -
மறக்க முடியாத மனிதர் டாக்டர் இஸ்மாயில். எம்மை விட்டு சென்று இன்றுடன் ஒரு வருடம். மறக்க முடியாத மனிதர்  டாக்டர் இஸ்மாயில். எம்மை விட்டு சென்று இன்றுடன் ஒரு வருடம். Reviewed by Madawala News on 6/11/2017 02:39:00 PM Rating: 5