Ad Space avaiable

கல்குடா பொலிஸ் பிரிவில் விபத்து... ஒருவர் உயிரிழப்பு.


அனா.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் நேற்று (09.06.2017) இரவு இடம் பெற்ற கார் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீரகல தெரிவித்தார்.

பாசிக்குடாவில் இருந்து கும்புருமூலை பகுதிக்கு வந்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாசிக்குடா மட்டக்களப்பு வீதியில் கும்புறுமூலை வெம்பு பகுதியில் மதிலில் மோதுண்டதிலயே இவ் விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவத்தில் மரணமடைந்தவர் பொலநறுவை பிரதேசத்தைச் சேர்ந்த சாமரரத்ன சுதேஸ் கரணா (வயது – 35) என்று அடையாளம் காணப்பட்ள்ளதுடன் காயமுற்றவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மரணமடைந்தவரின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல்களில் இசை நிகழ்ச்சி நடத்தும் குழுவினரே இவ் விபத்தில் சிக்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்குடா பொலிஸ் பிரிவில் விபத்து... ஒருவர் உயிரிழப்பு. கல்குடா பொலிஸ் பிரிவில் விபத்து... ஒருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 6/10/2017 10:47:00 PM Rating: 5