Ad Space avaiable

கஹ்பதுல்லாஹ் அல்லாவின் வீடு. கட்டார் நாட்டினர் உற்பட அனைவருக்கும் அது திறந்தே இருக்கும். சவூதி விளக்கம்.



ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய முக்கிய வழிபாடுகளுக்கு மக்காவிலுள்ள அல்லாஹ்வின் வீடு அனைவருக்கும் திறந்தே இருக்கும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

கட்டார் வாழ் மக்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா வழிபாடுகளை மேற்கொள்ள சவுதி அரசாங்கம் தடை விதித்துள்ளதாக வெளியாகிய செய்திக்கு சவுதி அரேபியா மறுப்புத் தெரிவித்தே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

சவுதி நாட்டின் எல்லைக்குள் நுழைந்த பின்னர் அவர்களின் இனம், மொழி, நாடு என்பன பார்க்கப்படுவதில்லை. அவர்கள் விருந்தாளிகளாகவே பார்க்கப்படுவதாகவும் சவுதி செய்திகள் தெரிவித்துள்ளன.

மக்காவுக்குள் வரும் அனைவரும் சமமானவர்களாகவே நோக்கப்படுகின்றனர். அவர்களிடையே நிற, நாடு வேறுபாடுகள் காட்டப்படுவதில்லை எனவும் சவுதி கூறியுள்ளது.

சவுதி அரசாங்கம் வழிபாட்டுக்காக வரும் சகல தரப்பினருக்கும், சகல நாட்டினருக்கும் தனது சேவைகளை வழங்கும்.  சவுதியின் நிருவாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக  வருகை தருபவர்களுக்கே இவ்வாறு சேவைகளை வழங்கும் என சவுதியின் ஓய்வு பெற்ற முன்னாள் புலனாய்வுத் துறைப் பணிப்பாளர் பிரிகேடியர் கலாநிதி முஹம்மத் அல் மின்சாவி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டார் மக்களின் ஹஜ், உம்ராவுக்கு சவுதி தடைவிதித்துள்ளதாக வெளியாகிய செய்திக்குரிய அழகியதொரு பதிலாகவே சவுதியின் இந்த மறுப்பு காணப்படுகின்றது. சவுதி அரசாங்கத்துக்கு உலகளவில் ஏற்படும் அவப்பெயருக்கு ஒரு பதிலாகக் கூட இந்த தகவலைக் கொள்ளலாம்.

இருப்பினும், கட்டாருக்கான தூதரகத்தை சவுதியிலிருந்து நீக்கிவிட்டு, கட்டாருடனான விமானத் தொடர்பை துண்டித்து விட்டு, கட்டாரின் தெற்கே உள்ள சவுதியின் எல்லையை மூடிவிட்டு, சகல விதமான இராஜதந்திர நடவடிக்கைகளையும் முடக்கிவிட்டு கஃபாவை மாத்திரம் திறந்து வைப்பதனால் என்ன பயன் இருக்கின்றது என்பது பொதுவாக பலரதும் கேள்வியாகும்.

அத்துடன், நாட்டு நிருவாக சட்டதிட்டங்களுக்கு அமையவே வருபவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி தற்பொழுது கட்டாருடன் உள்ள சகல விதமான தொடர்புகளையும் துண்டித்துள்ள நிலையில் சவுதியின் தற்போதைய சட்டம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கட்டார் நாட்டவர்கள் மக்காவுக்குள் வருவது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என சவுதி அறிவிப்பதாயின் எல்லைகளை ஏன் மூடிவிட வேண்டும். விமான சேவைகளை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

கஹ்பதுல்லாஹ் அல்லாவின் வீடு. கட்டார் நாட்டினர் உற்பட அனைவருக்கும் அது திறந்தே இருக்கும். சவூதி விளக்கம். கஹ்பதுல்லாஹ் அல்லாவின் வீடு. கட்டார் நாட்டினர் உற்பட அனைவருக்கும் அது திறந்தே இருக்கும். சவூதி விளக்கம். Reviewed by Madawala News on 6/12/2017 11:43:00 AM Rating: 5