Kidny

Kidny

பாடசாலை சீருடையுடன் மட்டு. கல்லடி பாலத்தில் இருந்து மாணவன் ஆற்றில் குதிப்பு. (படங்கள் இணைப்பு)


இன்று புதன்கிழமை காலை மாணவன் ஒருவர் மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ள நிலையில் அவரை தேடும் பணிகளை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையில் கணித பிரிவில் கற்றுவரும் அம்பிளாந்துறை, நாகமுனையை சேர்ந்த 17வயதுடைய க.பவனுஷன் என்ற மாணவனே இவ்வாறு ஆற்றில் குதித்துள்ளான்.

பாடசாலைக்கு செல்வதாக கூறி பாடசாலை சீருடையுடன் வந்த குறித்த மாணவன் பாலத்தில் புத்தகப் பையையும் சைக்கிளையும் மற்றும் பாதணியையும் வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளான்.

இதனைக் கண்டவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் பொலிஸார் கடற்படையினருக்கு அறிவித்து அங்கு விரைந்த கடற்படையினர் படகுகள் மூலம் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பாடசாலை சீருடையுடன் மட்டு. கல்லடி பாலத்தில் இருந்து மாணவன் ஆற்றில் குதிப்பு. (படங்கள் இணைப்பு) பாடசாலை சீருடையுடன் மட்டு. கல்லடி பாலத்தில் இருந்து மாணவன் ஆற்றில் குதிப்பு. (படங்கள் இணைப்பு) Reviewed by Madawala News on 6/07/2017 12:18:00 PM Rating: 5