tg travels

தௌஹீத் ஜமாத் கிளையில் நீர்க்குழாய்களை திருடி, ஒலிபெருக்கியை சேதமாக்கினர். (படங்கள்)

இன்று நள்ளிரவு குறித்த சம்பவமானது காங்கேயனோடை பிரதேசத்தில் நடந்துள்ளது. இவ் தௌஹீத் அமைப்பானது கடந்த 6 வருடங்களாக இக்கிராமத்தில் இயங்கி வருவதுடன் கடந்த 3 வருடங்களாக குறித்த இடத்தில் மார்க்க விடயங்களை நிகழ்த்தி வருகிறது.

கடந்த 3 ஆம் திகதி சுபஹ் நேரம் காங்கேயனோடை  முஹைதீன் ஜும்மாஹ் பள்ளிவாயலிலிருந்து 2 ஆம் திகதி எழுதப்பட்டுள்ள கடிதம் ஒன்று காங்கேயனோடை அனைத்து பள்ளிவாயல் ஒன்றியம் எனும் அமைப்பினால் காங்கேயனோடை அனைத்து பள்ளிவாயல் சார்பாக அப் பள்ளிவாயல்களை சேர்ந்த 5 நிர்வாகிகளால் காங்கேயனோடை தௌஹீத் ஜமாஅத் இட்கு கிடைக்கப்பெற்றது.

எங்களுடைய இறை செயட்பாடுகளை பிடிக்காத இவர்கள் இது சம்மந்தமாக கலந்துரையாட அதில் அழைப்பு விடுத்திருந்தனர். அதட்கு மறு கடிதம் தௌஹீத் ஜமாத்தினரால் நேற்று இரவு 11 மணியளவில் (3 ஜூன் 2017) அனுப்பி வைக்கப்பட்ட்து. அனுப்பி வைக்கப்பட்டு 1 மணி நேரம் கழித்து தௌஹீத் ஜமாத்தின் நீர்க்குழாய்கள் களவாடப்பட்டுள்ளதோடு ஒலிபெருக்கியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தற்போது போலீஸில் தௌஹீத் ஜமாஅத் ஆல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தால் இவ் காங்கேயனோடை அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியம் என்று கூறப்படும் அமைப்பு சூத்திரதாரிகளாக இருப்பார்கள் என்று காங்கேயனோடை தௌஹீத் ஜமாஅத் தெளிவு படுத்துகிறது.

குறித்த இக்கடிதத்தில் ஒப்பமிட்டுள்ள நிர்வாகிகள் அரச உத்தியோகத்தர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இது தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனம் இது தொடர்பாக சுமூக நிலையை இவ்வூரில் தோற்றுவிக்க வேண்டும் என்று காங்கேயனோடை தௌஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

வஸ்ஸலாம்

-M.S ரிகாஸ் -

தௌஹீத் ஜமாத் கிளையில் நீர்க்குழாய்களை திருடி, ஒலிபெருக்கியை சேதமாக்கினர். (படங்கள்) தௌஹீத் ஜமாத் கிளையில் நீர்க்குழாய்களை திருடி, ஒலிபெருக்கியை சேதமாக்கினர். (படங்கள்) Reviewed by Madawala News on 6/04/2017 09:53:00 AM Rating: 5