Ad Space Available here

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?


- முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது -
இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த கொலை வெறியாட்டத்துக்கு சவூதி அரேபியா, கத்தார் போன்ற
அரபு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஆதரவளித்ததுடன், இராணுவ, பொருளாதார உதவிகளையும் செய்தது.

1996 இல் இருந்து தலிபான் அரசினால் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்று வந்தது. அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின் லாதின் ஆப்கானிஸ்தானில் ஒழிந்துகொண்டு இருக்கின்றார் என்று காரணத்தினை கூறிக்கொண்டு, தலிபான்களின் இஸ்லாமிய அரசுக்கு எதிராக அரபு நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து, 2௦௦2 இல் அமெரிக்கா பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த யுத்தத்தினால் தலிபான்களின் இஸ்லாமிய ஆட்சி தோல்வி அடைந்ததுடன் அமெரிக்காவின் பொம்மை ஆட்சி ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்டது.      

ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான்களின் இஸ்லாமிய ஆட்சியை அகற்றுவதற்கு சவூதி, கத்தார் போன்ற அரபு நாடுகள் மட்டுமல்லாது, மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி முஷாரப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தனது ஆப்கானிஸ்தான் எல்லையை முற்றாக அமெரிக்காவுக்கு திறந்து கொடுத்தது.
இதற்கு சன்மானமாக ஏராளமான பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், அரபு நாடுகளும் வழங்கியது. அது இன்றுவரை ஆப்கானிஸ்தானில் முடிவில்லாத யுத்தமாக தொடர்ந்து கொண்டிருப்பதுடன், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

ஒசாமா பின் லாதின் அமெரிக்காவினால் கொல்லப்பட்டதன் பின்பு அல்கொய்தா இயக்கத்தின் ஈராக்குக்கு பொறுப்பாக இருந்த அபூபக்கர் அல் பக்தாதி தலைமையில் ஐ. எஸ் என்னும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஈராக், சிரியா போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை கைப்பேற்றி, தங்களது பிரதேசங்களை இஸ்லாமிய சாம்ராஜ்யம் என பிரகடனப்படுத்தி தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த ஐ.எஸ் இயக்கம் பற்றி முன்னுக்குப்பின் முறனான செய்திகள் வெளிவருவதனால் அது ஒரு பயங்கரவாத இயக்கமாகவும், இஸ்லாமிய விரோத செயல்பாட்டாளர்கள் என்றும் சித்தரிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், ஐ.எஸ் இயக்கத்தினர் பற்றிய எந்தவொரு நல்ல விடயங்களும் வெளியே வருவதில்லை. அதனால் அந்த இயக்கம் பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாதுள்ளது.

இருந்தாலும் ஐ.எஸ். இயக்கத்துக்கு கத்தார் நாடு உதவி செய்வதாக சவூதி குற்றம் சாட்டுகின்றது. இது உண்மையாக இருக்குமானால் இவர்கள் இஸ்லாமிய கிலாபத்தினை உருவாக்குவதற்காக போராடுகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனவே பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளை அழித்து அமெரிக்காவுக்கு சாதகமான ஆட்சியாளர்களை அங்கு உருவாக்குவதற்கு துனைபுரிகின்றவர்கள் யார்? மீண்டும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் உலகில் உருவாகுவதற்கு தடையாக இருப்பவர்கள் யார்?
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அவலங்களுக்கும், “லாயிலாக இல்லல்லாஹ்” என்று கலிமா சொன்ன பல இலட்சம் இஸ்லாமியர்களின் கொலைகளுக்கும் காரணமானவர்கள் யார்? மத்திய கிழக்கில் அமெரிக்க படைகளை வரவழைத்து, அவர்களுக்கு தளம் அமைக்க இடம்கொடுத்து சகோதர இஸ்லாமிய நாடுகளை கண்காணிக்க வைத்திருக்கின்றவர்கள் யார்?
செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்த பல இலட்சம் முஸ்லிம்கள், இன்று உண்ண உணவுமின்றி, தன் குழந்தைகளுக்கு போசாக்கு உள்ள உணவுகளை வழங்குவதற்கு வசதியின்றி அகதிகளாக அங்குமிங்கும் அலைந்து திரிவதுடன், தன் குடும்பங்களையும், உறவுகளையும் பிரிந்த அவலநிலைக்கு காரணமானவர்கள் யார்?

இந்த கேள்விகள் அனைத்துக்குமான விடை ஒன்றுதான். அதாவது சவூதி அரேபியா, கத்தார் உற்பட மத்திய கிழக்கின் குடும்ப ஆட்சியாளர்களே இவை அனைத்துக்கும் முழு பொறுப்புமாகும். தங்களது குடும்ப ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காகவும், வர்த்தக நலன்களுக்காகவும் இஸ்லாத்தின் எதிரிகளோடு கூட்டுச்சேர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகின்றார்கள்.

அவர்களுக்கு தேவைப்படுவது இஸ்லாமிய ஆட்சியல்ல. மாறாக குடும்ப ஆட்சியும், வியாபார நலன்களுமே! அப்படித்தான் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது என்றாலும் அது வஹ்ஹாபியா? சுன்னியா? சீயாவா? என்ற பிரிவினைகளினால் முறண்பட்டு தங்களுக்குள் மோதுண்டு அழிந்து கொள்கின்றபோது, அதனால் நன்மை அடைகின்றவர்கள் யகூதி, நசாராக்களே ஆகும். அதுதான் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் வெற்றியும், இஸ்லாமியர்களின் அவலநிலையுமாகும்.

முற்றும்.
உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?  உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?   Reviewed by Madawala News on 6/15/2017 07:16:00 PM Rating: 5