tg travels

கோஹ்லியின் திமிரை என்னால் தான் அடக்க முடியும்: மெக்கானிக்கல் இன்ஜினியர்



- Hassim Mohamed Naleem-

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியின் திமிர் பிடித்த மனப்பான்மையை தன்னால் தான் அடக்க முடியும் என்று மெக்கானிக்கல் இன்ஜினியர் உபேந்திர நாத் பிரம்மச்சாரி கூறியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகிய பின்னர், பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கும்ப்ளேவுக்கே இந்த நிலைமை என்றால் நாம் எல்லாம் எங்கே என்று பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிபதற்கு பலர் தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள உபேந்திர நாத் பிரம்மச்சாரி கூறுகையில், கும்ப்ளே ராஜினாமா செய்தபின், கோஹ்லிக்கு சிறப்பு வாய்ந்த நபர் பயிற்சியாளராக தேவையில்லை என்று நான் உணர்ந்ததால், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தேன்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்கள் யாரேனும் தெரிவு செய்யப்பட்டால் அவர்களும் கோஹ்லியால் அவமதிக்கப்படுவார்கள்.
கோஹ்லியின் திமிரை என்னால் தான் அடக்க முடியும்: மெக்கானிக்கல் இன்ஜினியர் கோஹ்லியின் திமிரை என்னால் தான் அடக்க முடியும்: மெக்கானிக்கல் இன்ஜினியர் Reviewed by Madawala News on 6/28/2017 12:13:00 AM Rating: 5