Kidny

Kidny

குவைட் சென்ற இரு பணிப்பெண்கள் உயிரிழந்த சோகம்.



வெல்லம்பிடிய மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் இருந்து குவைட் நாட்டிற்கு பணிபுரிவதற்காக சென்ற இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த மரணங்கள் சந்தேகத்திற்கிடமானது என அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெல்லம்பிடிய – வதுல்லவத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய முனிசாமி மாரன்னன் கௌரி என்பவர் குவைட் நாட்டில் பணிபுரிவதற்காக சென்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தாய் என தெரியவந்தள்ளது.

அவர் தமக்கான வீடொன்றை நிர்மாணிக்கும் நோக்குடனே குவைட் நோக்கி சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிலாபம் - முகுணுவடுவன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவர் குவைட் நாட்டிற்கு பணிப்புரிவதற்காக சென்று உயிரிழந்தார்
குவைட் சென்ற இரு பணிப்பெண்கள் உயிரிழந்த சோகம். குவைட் சென்ற இரு பணிப்பெண்கள் உயிரிழந்த சோகம். Reviewed by Madawala News on 6/16/2017 11:34:00 AM Rating: 5