Kidny

Kidny

மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் : அமைச்சர் சம்பிக்கவின் விஷமத்தனமான கருத்துக்கள்.


லத்தீப் பாரூக்

ஜம்மிய்யத்துல் உலமா மற்றும் தௌஹீத் ஜமாஅத் ஆகிய முஸ்லிம் அமைபபுக்களுக்கு ஐளுஐளு அமைப்புக்களோடு தொடர்புகள் இருப்பதாகக் கூறி பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் ஆங்கில தினசரி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அமைச்சரின் இந்த மடத்தனமான கற்பனையான குற்றச்சாட்டுக்கள் கேலிக்குரியது மட்டும் அல்ல ஆபத்தானதும் கூட. அதிலும் குறிப்பாக கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் இலக்கு வைத்து பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டு வருகின்ற பின்னணியில் இத்தகைய கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை.

அமைச்சர் சம்பிக்கவின் இந்த அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு சிரேஷ் ஊடகவிலாளர் லத்தீப் பாரூக் அளித்துள்ள பதில் :

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஊடுறுவுவதற்கா ஆயுத உற்பத்தி நாடுகளாலும் நிறுவனங்களாலும் உருவாக்கப்பட்ட பேய்தான் ஐளுஐளு. இதுபற்றி உரி தகசல்களோடும் ஆதாரங்களோடும் அமைச்சர் சம்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்ய வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள சிரேஷ்ட பலனாய்வு அதிகாரிகளும் ஏனைய பாதகாப்புத் துறை அதிகாரிகளும் மீண்டும் மீண்டும் பல த்வைகள் மறுத்து வந்துள்ள ஒர வடயம் தான் ஐளு இன் செயற்பாடுகளோ அல்லது ஊடுறுவலோ இந்த நாட்டுக்குள் இல்லை என்பது. இந்த பாஸிஸ வாத அமைப்பை உருவாக்கியது அமெரிக்கா. அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கியது இஸ்ரேல். இந்த இரு நாடுகளினதும் பங்காளியான சவூதி அரேபியா அவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கியது. உலகளாவிய ரீதியில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கொலைவெறி கொண்ட பிரசாரத்தினதும் நடவடிக்கைகளினதும் ஒரு அங்கமாக இந்த எதவிகள் ஐளு க்கு வழங்கப்பட்டன.

இருந்தும் கூட அமெரிக்க இஸ்ரேல் யுத்த வெறியர்களொடு இணைந்து கொண்ட இந்த நாட்டின் பிரதானபிரிவு ஊடகங்கில் ஒரு பகுதி முஸ்லிம்கள் மீதான கீhத்திக்கு பங்கம் ஏற்படுத்த தொடர்ந்து ஐளுஐளு ஐ பயன்படுத்தி பொய்யான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்கள் ஊடகங்களில் வெளிவராமல் மழுங்கடிக்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்தப் பிரசாரத்தின் ஒரு அங்கமாகத் தான் அமைச்சா சம்பிக்க ரணவக்க தனது வழமையான பாணி குற்றச்சாட்டக்களை மீண்டும் தொடங்கி இலங்கையிலும் ஐளுஐளு செயற்பாடுகள் இருப்பதாகவும் ததனோடு முஸ்லிம்களுக்கு தொடர்புகள் இருப்பதாகவுத் தெரிவித்துள்ளார்.

முதலில் இது அமைச்சர் சம்பிக்கவின் கீழ் வருகின்ற ஒரு விடயமே அல்ல என்பதை அவர் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இது சட்ட ஒழுற்கு மற்றும் பாதகாப்பு அமைச்சு என்பனவற்றின் கீழ் வரகின்ற விடயமாகும். இந்த நாட்டின் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வர கனவு காணும் ஒருவர் இதைப்பற்றி பேசுவதற்கு முன்னதாக இந்த நாட்டில் சிறுபான்மை இன மக்கள் மீது தாக்குதல'களை நடத்தும் சிங்கள தீவிரவாத அமைப்புக்களுக்க எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும் பொலிஸ் மா அதிபரை கேட்டிருக்க வேண்டும்.

வெள்ளவத்தையில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த போது அவர் விடுத்த அவசர கோரிக்கையைப் போல் இதையும் செய்திருக்க வேண்டும்.

சிங்கள தீவிரவாதத்துக்கு எதிராக சம்பிக்க இதுவரை வாய் திறக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெற்ற போது அவர் சபையில் இரக்க வில்லை. சிங்கள மற்றும் தமிழ் பிரதிநிதிகள் பலர் தமது கண்டனங்களை அப்போது தெரிவித்தனர். கூட்டு எதிரணி என்று கூறப்படும் மகிந்த ஆதரவு அணியும் கூட இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை. சம்பிக்க என் இந்த விவாதத்தில் கலந்துகொள்ள வில்லை என்பதற்கான காரணத்தை அவரே நன்கு அறிவார்.

இதைப்பற்றி எல்லாம்அலட்டிக் கொள்ளாத அமைச்சர் சம்பிக்க வெள்ளவத்தை கட்டிட சம்பவம் இடம்பெற்ற போது எந்த விதமான விசாரணைகளும் தொடங்கப்படுவதற்கு முன்னரே அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்ரைத மட்டும் காட்டி அவரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அந்தக் கட்டிடம் தன் மீது இடிந்து விழும் என்ற நம்பிக்கையிலோ எதிர்ப்பார்ப்பிலோ அதன் மீது கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டவில்லை அந்த நபர்.

அவரே அந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதுதான் உண்மை. ஆனால் அதற்கு சில வாரங்களுக்கு முன் அதை விட கொடூரமான சம்பவம் மீத்தொட்டமுல்லையில் இடம்பெற்றது. அங்கு குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 32 அப்பாவி உயிர்கள் பலியாகின. இந்த குப்பை மேடு அங்கு தொடங்கப்பட்ட அன்றைய ஆட்சியிருலும் சரி அது சரிந்து விழுந்த இன்றை ஆட்சியிலும் சரி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மக்கியமானதோர் அமைச்சர். இன்றை ஆட்சியில் அதனோடு தொடர்புபட்ட ஒரு முக்கிய நிறுவனம் அவரின் பொறுப்பின் கீழ் உள்ள நிறுவனம்.

வெள்ளவத்தை சம்பவம் தற்செயலான ஒர விபத்த. மீத்தொட்டமுல்லை அப்படியல்ல குப்பை மேடு சரிந்து வீழும் என்பதை தெரிந்து கொண்டே அப்பாவி மக்கள் அதற்கு எதிராக எழுப்பிய எதிர்ப்பக்களையும் பொருட்படுத்தாமல் அந்த மக்களின் குரல் வளையை நசுக்கி ஏற்படுத்தப்பட்ட ஒரு அழிவு. இதற்க யார் பொறுப்பு கூறுவது? யாரை கைது செய்வது?

அதிகாரிகளின் அசமந்தம் தான் இதற்கு காரணம் என்பது தற்போது உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சம்பிக்க ஜாதிக்க ஹெல உறும கட்சியைச் சார்ந்தவர். அவர்களின் கொள்கை என்ன என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். குறி சொல்லும் ஒருவரின் பேச்சை நம்பி இந்த நாட்டின் உயர் பதவிக் கதிரையை அலங்கரிக்கலாம் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு அதற்கான விவேகமும் கொஞ்சம் தேவை.

 தன்னிடம் இருக்கும் அடிப்படையான இனவாதக் கணத்தை வெளிப்படையாகக் காட்டாமல் கொஞ்சம் மறைக்கவாவது அவர் தெரிந்திருக்க வேண்டும். சிறுபான்மை இனங்களின் குறைந்தபட்ச ஆதரவையாவது பெறாமல் யாரும் இந்த நாட்டின் உயர் பதவியை அடைய முடியாது என்பதே யதார்த்தம். பூகோள கிராமத்தால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் பட்டியலில் அமைச்சர் சம்பிக்வும் இருக்கின்றார் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.


ஜம்மிய்யத்துல் உலமா மற்றும் தௌஹீத் ஜமாஅத் என்பன ஐளுஐளு உடன்தொடர்புகளைக் கொண்டிருப்பதாக அமைச்சா சம்பிக்க தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும்; பொறுப்பற்றவையாகவும் அச்சமூட்டுபவையாகவும் உள்ளன. பொது பல சேனாவை மேலும் தூண்டி வீடும் வகையிலும் அவை அமைந்துள்ளன.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்களும் வர்த்தக நிலையங்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்ற நிலையால் கொழுந்து விட்டெறியும்; பதற்றத்துக்கு மேலும் எண்ணெய் ஊற்றும் வகையிலேயே அமைச்சரின் கருத்துக்கள் அமைந்துள்ளன. இவ்வாறான கருத்துக்கள் மூலம் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகமேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை அமைச்சா சம்பிக்க மறைமகமாக நியாயப்படுத்துகின்றாரா என்ற அச்சத்தையும் இது ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு நியாயப்படுத்தி 1983 கலவரம் போன்ற ஒர கலவரத்தை இரத்தக்களரியை இம்முறை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட அமைச்சர் முயலகின்றாரா? என்ற அச்சத்தை இது உருவாக்கியுள்ளது.

ஜுலை கலவரம் போன்ற ஒரு கலவரத்தை முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கி விடுவதன் மூலம் இந்த நாட்டின் இரண்டு மில்லியன் உறுதியான சனத்தொகையைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தை ஒட்டு மொத்தமாக அழித்து விட முடியாது. 83 வன்முறைகளின் பின் உருவானததான் உலகளாவிய ரீதியில் சக்தி மிக்க தமிழ் புலம் பெயர் அமைப்பு.

இது சர்வதேச அரங்கில்  பலம் மிக்க அமைப்பாகச் செயற்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக இந்த புலம்பெயர் சமூகம் ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக 83க்குப் பின் இலங்கையில்பதவிக்கு வந்த எல்லா அரசுகளுமே சர்வதேச நாடுகள் முன்னிலையில் தலைகுனிவையே சந்தித்துள்ளன. 83 கலவரத்தின் போது ஜே.ஆர் அரசு முதல் ஐந்து நாற்களும் இனவாதிகளுக்கு விட்டுக் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்தது.

இந்தியா இதனைக் கண்டித்த தனது வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பி வைத்த பிறகுதான் இலங்கை அரசு செயற்படத் தொடங்கியது.

இந்தியத் தலையீட்டின் விளைவாகத் தான் 1987 ஜுலையில் சர்ச்சைக்குரிய இலங்கை இந்திய சமாதான ஒப்பநதம் கைச்சாத்திடப்பட்டது. இனவாத கலவரத்தை தவறாகக் கையாண்ட இலங்கை அரசுக்க கிடைத்த போலித்தனமான ஒர கௌரவம் தான் இந்த உடன்படிக்கை.
முஸ்லிம்களை தற்போதும் இன்னும் சிறிது காலத் தாமதித்து கிறிஸ்தவர்களையும் தனது பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும் என பொது பல சேனா கருதினால் நலிந்து போயுள்ள தேசிய அரசும் மிதவாத போக்குடைய இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அதற்கான மிகப் பெரிய விலையை செலுத்த வேண்டியிருக்கும்.

நாட்டின் பொருளாதார யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் அமைச்சர். சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத கடன் சுமையில் நாடு மூழ்கிக் கொண்டிருக்கின்றது. இன்று இந்த நாட்டுக்கு கிடைக்கும் உண்மையான மொத்த வெளிநாட்டு வருமானத்தில் 50 வீதத்துக்கும் அதிகமான வருமானம் முஸ்லிம் நாடுகள் மூலமாகவே கிடைக்கின்றது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மூலம் 85 வீத வெளிநாட்டு வருமானமும், தேயிலை ஏற்றுமதி மூலம் 70 வீத வளிநாட்டு வருமானமும் கிடைக்கின்றன.

இந்த நாடு சில மடையர்களால் ஆளப்படுகின்றது என்பதை நாம் வெளிநாடுகளுக்கு காட்டாமல் இருப்பதே நல்லது. இந்த நாட்டின் பிரிவினைவாதத்துக்கு அதரவளிக்க மறுத்ததால் அல்லது வடக்கு கிழக்க இணைப்பை எற்க மறுத்ததால் முஸ்லிம்கள் ஏற்கனவே டுவுவுநு இடம் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். தற்போது தென்பகுதியில் உள்ள வன்முறை கலந்த தீவிரவாத கும்பல்களிடம் மீண்டும் ஒரு இழப்பை சந்திக்க அந்த சமூகம் தயாராக இல்லை.


ஒருவேளை இந்த அரசாங்கம் தற்போது பல்வேறு பிரிவுகளிலும் சந்தித்து வரும் பின்னடைவுகள் மற்றும் தோல்விகளை மூடி மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான ஒரு பகீரத தந்திர நாடகமாகவும் இன்றைய நிகழ்வுகளும் கருத்துக்களும் அமையலாம். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி சுமார் 30 முறைப்பாடுகளும் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான சம்பவங்கள் பற்றி சுமார் 20 முறைப்பாடுகளும் பல்வேறு இடங்களிலும் செய்யப்பட்டுள்ள போதிலும் கூட அவை தொடர்பாக இன்னும் ஒரு இடத்திலும் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் இருக்கின்றமை இந்த சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்கின்றது.

கையாலாகாத மடையர்களைக் கொண்ட ஒரு கூட்;டமே இலங்கை பொலிஸார் என்பதை இந்த நாட்டிலோ அல்லது வேறு எங்குமோ எவருமே நம்பத் தயாராக இல்லை.

தற்போதைய நிலைமைகளின் பாரதூரத்தை கருத்திற் கொண்டு ஜே.வி.பி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட இன்னும் பல முன்னணி பௌத்த புத்திசாலி அமைப்புக்களும, புத்தி ஜீவிகளும்;, பௌத்த மதகுருமாரும், எழுத்தாளர்களும் இன்னும்பலரும் அரசாங்கத்தக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

இந்த நாட்டில் இன்னொரு பாரிய அழிவையும் இரத்தக் களறியையும் தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு அவர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த நாட்டில் சிறுபான்மையினத்தவர்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் மு;னனொருபோதும் இல்லாத அளவுக்கு அச்சத்தோடும் கவலையோடும் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த இரண்ட மாத காலத்தில் அவர்கள் சொல்லொனா மன வேதளைக்கு ஆளாகி உள்ளனர். பருவ மழை ஏற்படுத்திய தாக்கம் 200க்கும் அதிகமான அப்பாவி மக்களைக் கொன்றுள்ளது. புனித றமழான் மாத ஆரம்பத்திலேயே முஸ்லிம்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நோன்பு காலத்தை மையப்படுத்தியே பொது பல சேனாவின் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன.

முப்படையினரும், சிவில் அமைப்பக்களும் மற்றும் மற்றும் ஊமகங்களும்பாதிக்கப்பட்ட மக்களின் நலநன பேணுவதில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த நிர்வாண மன்னர்கள் செய்து முடிக்க வேண்டிய வேலையை அவர்கள் செய்துள்ளனர். அரசியல் ஜாம்பவான்களின் இயலாமையும் இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒர அச்சம் மிக்க சூழலில் தான் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஜுன் 1ல் வெளியான ஆங்கில தினசரி ஒன்றுக்க அளித்துள்ள பேட்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

'துரதிஷ்டவசமாக இன்று நாம் இந்த நாட்டில் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. பிரிட்டனின் மன்செஸ்டரில் நடந்த குண்டு வெடிப்பில் எமக்கு ஒரு நல்ல உதாரணம் உள்ளது.

குழப்பவாத போக்குடைய ஒரு இளைஞர் தன்னிச்சையாகத் தூண்டப்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளார். இவ்வாறான எத்தனை குள்ளநரிகள் இந்த நாட்டில் தனியாக   சுற்றிக் கொண்டுள்ளன என்பதை யார் அறிவார்?

இந்த அச்சுறுத்தல் பற்றி முன்னணி உலக புலனாய்வு பிரிவுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.ஆனால் நாங்கள் இன்னமும் அதில் சரியான வகனம் செலுத்த வில்லை. பொது பல சேனா, ஜம்மிய்யத்துல் உலமா, தௌஹீத் ஜமாஅத் என்பன வெளிப்படையாகத் தெரிகின்றன. அவாள் சட்டத்தை மீறுகின்ற போது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் நான் குறிப்பிடகின்ற அச்சுறுத்தல் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாகவே உள்ளது.

isis ஆல் தூண்டப்பட்டுள்ள நபர்கள் பலர் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து இலங்கையில் செயற்படகின்றார்கள் என புலனாய்வு நிறுவனங்கள் நிரூபித்துள்ளன.

மேலும் வெளிநாட்டு சக்திகள் குறிப்பாக பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான்,மாலைதீவு அகிய நாடுகளில் இருந்து இங்கு வந்து செயற்படும் நூற்றுக் கணக்கானவர்கள் உள்ளளனர். அது எமக்குத் தெரியும். முஸ்லிம் சமூகத்துக்கு எதிர்காலத்தில் இது மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் அமையப் போகின்றது'

அமைச்சா ரணவக்க சொல்வது சரியாயின் அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் யார் என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும். தற்போது ஏற்பட்டள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் அவர் தன்னிடம் உள்ள முழு ஆதாரங்களையும் வெளியிட வேண்டும்.

 இந்த நாட்டின் பொறுப்புள்ள ஒர பிரஜை என்ற வகையில் இந்த நாட்டில் உள்ள isis சக்திகள் பற்றி தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் அவர் வெளியிட வேண்டும்.

உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களோடு அவர் அவற்றை பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்தால் அவர் கறிப்படும் அந்த சக்திகளை வளைத்தப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முழ முஸ்லிம் சமூகமம் அமைச்சரின் பின்னாரும் பொலிஸ் மா அதிபரின் பின்னாலும் அணி திரளும் என்பதை என்னால் நிச்சயமாhகக் கூற முடியும்.

வெளிநாட்டச் சக்திகள' இங்குள்ளதாக கூறுவத உண்மையானால் அவர்களை கூட சுற்றி வளைத்து கைது செய்த நாடு கடத்துவது அரசாங்கத்தக்க ஒன்றும் பெரிய விடயம் அல்ல.

ஆனால் அமைச்சர் நிச்சயம் அவ்வாறு செய்ய மாட்டார் என்றே நான் நம்புகின்றேன். காரணம் இலங்கையில் isis இருப்பதாக அவர் கூறுவது முற்று முழுக்க அவரின் கற்பனையே அன்றி வேறில்லை.

ஆனால் ஒன்றை அமைச்சருக்கு தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அவர் கூறும் அந்த புலனாய்வு அறிக்கைகள் போலியானவை என்பதை அவர் புரிந்த கொள்ள வேண்டும். அந்த போலி அறிக்கைகளுயுக்கள் சிக்கி ஒரு சமூகத்தின் மீது அபாண்டமாக பலி சுமத்த வேண்டாம்.

அமைதியாக வாழும் மக்கள் மத்தியிலும் இனக்குழுக்கள் மத்தியிலும் நாடுகள் மத்தியிலும் மோதல்களை உருவாக்கி அதன் மூலம் தமது ஆயுதங்களை விற்பனை செய்யத் திட்டம் தீட்டும் நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளால் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தான் இவை. இந்திய இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஊடகங்களாலும் புலனாய்வ முகவராண்மைகளாலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன் வைக்கப்படும் இத்தகைய போலியான அறிக்கைகளை அடிப்படையாக வைத்து அரசாங்கத்தை தவறாக வழிநடத்த முயலக் கூடாது.

மூன்றாம் மண்டல நாடுகளில் தமது சட்ட விரோத ஊடுறுவல்களை நியாயப்படுத்தவும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் மோதல்களை உருவாக்கவும் மேலைத்தேச சக்திகளால் உருவாக்கப்பட்டு போஷிக்கப்படும் பேய்தான் ஐளுஐளு. மேலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் பாதுகாப்பு நிலைமைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொணடு வந்து தமக்கு சாதகமான வெளிநாட்டு நிறவனங்களிடம் ஒப்படைக்கவும் கண்கானிப்பதற்காகவும் இந்த isis மாயை பயன்படுத்தப் படுகின்றது.

அதன் மூலம் எல்லா நாடுகளினதும் உள் விவகாரங்களில் கூட இடையூறின்றி தலையிடும் ஒரு முயற்சியே இதுவாகும்.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்க ஒவ்வொரு துறையிலும் மிகவும் திட்டமிட்ட முறையில் பாரபட்சம் காட்டப்பட்டு வந்த பொதிலும் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் அவற்றை எல்லாம் பொருத்தக் கொண்ட மிகவும்அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளது என்பதை அமைச்சா ரணவக்கவும் அவரின் அமைச்சரவை சகாக்களும் நன்கு நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அமைதியான முறையில் பௌத்த மதத்தை உண்மையாகப் பின்பற்றறும் பிரதான பிரிவு சிங்கள பௌத்த மக்களோடு முஸ்லிம் சமூகத்துககு எவ்வித பிரச்சினையும் கிடையாது.

ஜாதிக்க ஹெல உறுமயவின் சிந்தனாவாதம் இந்த நாட்டு மக்கள் அறியாத ஒன்றல்ல. பொது பல சேனாவின் நிகழ்ச்சி நிரலுக்கும் .ஹல ஊறுமயவின் நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் பாரிய தூரமும் கிடையாது.

முஸ்லிம்களுக்கு எதிரன பிரசாரத்தில் ஹெலஉறுமய விட்ட இடத்தில் இருந்து தான் பொது பல சேனா தொடங்கியுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சவூதி அரேபிய அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 500 வீடுகளை இன்னமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க விடாமல் தடுத்தது ஹெல உறுமயதான் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

இப்போது அவை கைவிடப்பட்டு பற்றைக் காடாகி இடிந்து விழும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னமும் மோசமான நிலைமையில் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிடைத்த நிதியில் மூன்று பில்லியன்களுக்கம் அதிகமான தொகையை ஏப்பம் விட்ட இருதயம் அற்றஅரசியல்வாதிகளும் தலைவர்களும் கூட இந்த நாட்டில் தான் எள்ளனர் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

மன்செஸ்டர் சம்பவத்தை அமைச்சர் சம்பிக்க உதாரணமாகக் காட்டியுள்ளார். தனிப்பட்ட தூண்டுதலால் தாக்குதல் நடத்தக் கூடியவர்கள் இலங்கையிலும் இருக்கலாம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மன்செஸ்டரில் தாக்குதல் நடத்திய அந்த 22 வயதான இளைஞன் லிபியா வம்சாவழி இனத்தைச் சேர்ந்தவர்.

லிபியா மீது அமெரிக்கா- ஐரோப்பா- இஸ்ரேல் என்பன கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித் தனத்தால் நேரடியாக உருவாக்கப்பட்டவன்தான் சல்மான் அபேதி என்ற அந்த இளைஞன் என்ற உண்மை அமைச்சர் சம்பிக்கவுககு தெரியாமல் போய்விட்டது.

ஆபிரிக்கா கண்டத்தின் மிகவும் செல்வந்த நாடு லிபியா. மக்கள் சந்தோஷமாகவும்அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்த ஒரு நாடு அது. அந்த நாட்டின் எல்லையற்ற செல்வத்தை ஏப்பமிடுவதற்காக அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் இஸ்ரேல் என பல நாடுகள் இணைந்து குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்த நாட்டை சின்னாபின்னப்படுத்தின.

 அதனால் தான் அந்த நாடு இன்று கொலை களமாக மாறியுள்ளது. அங்கு வாழம் மக்களின் உயிருக்க எந்த எத்தரவாதமும் அற்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதகாப்பு தெடி அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநஜிதிகளைக் கண்ணால் கண்டு துவண்டு பொன இளைஞாகள் சிலர்தான் இன்று மேற்குலக நாடகளுக்கு எதிரான குண்டகளாக மாறிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த யதார்த்தத்தை அமைச்சர் சம்பிக்க ரணவக்க முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த நாட்டில் இன்னொரு இரத்தக்களறியை ஏற்படுத்தி இந்த நாட்டை இன்னொரு வாழும் நரகமாக மாற்றத் துடிக்கும் இனவாத கயவர்களுக்கு இது ஒரு தெளிவான செய்திதான்.


மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் : அமைச்சர் சம்பிக்கவின் விஷமத்தனமான கருத்துக்கள். மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளம் : அமைச்சர் சம்பிக்கவின் விஷமத்தனமான கருத்துக்கள். Reviewed by Madawala News on 6/11/2017 11:16:00 AM Rating: 5