tg travels

மஹாவலி கங்கையில் மூழ்கி இரு பிள்ளைகளின் தந்தை (36) உயிரிழப்பு.

( மொஹொமட்  ஆஸிக்)
கண்டி  கன்னோருவ பிரதேசத்தில் மஹாவலி கங்கையில்  நேற்று 09 ம் திகதி மாலை 6.30  மணி அளவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 கொழும்பு பிரதேசத்தில் தனியார் நிருவனம் ஒன்றில் பனி புரியும் 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.

 09 ம் திகதி கண்டியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம் பெற்றுள்ள திருமன வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின் நன்பர்களுடன் கன்னோருவ பிரதேசத்தில்  மஹாவலி கங்கையில் நீராடச் சென்றுள்ள இவர் நீரில் மூழ்கி கானாமற் போயுள்ளார் பின்னர் நன்பர்கள் இவரை தேடிய போதும் கிடைக்காத நிலையில் கட்டுகஸ்தோட்டை  பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று  10 ம் திகதி காலை முதல் கடற் படையினர் மேற்கொண்ட  தேடுதலின் பின் இன்று 10 ம் திகதி மாலை இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இம் மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணையும்  பிரேத பரிசேதனையும் இன்று இடம்  பெற உள்ளது.

மஹாவலி கங்கையின் மிக அளகான இடமான இவ்விடம் கங்கையின் மிக ஆபத்தான இடமுமாகும். இவ் விடத்தில் கடந்த சில் வருடங்களுக்குள் 300 க்கும் மேற்பட்டவர்கள்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் பல முறை ஊடகங்கள் மூலம் அறிவுருத்தப்பட்ட போதும்  அவற்றை பொருட்படுத்தாததே இவ்வாரான விபத்துகளுக்கு காரணமாகும்.



மஹாவலி கங்கையில் மூழ்கி இரு பிள்ளைகளின் தந்தை (36) உயிரிழப்பு.  மஹாவலி கங்கையில் மூழ்கி இரு பிள்ளைகளின் தந்தை (36) உயிரிழப்பு. Reviewed by Madawala News on 6/11/2017 10:39:00 AM Rating: 5