Ad Space avaiable

இனிமேல் மகாநாயக்கத் தேரர்களது அறிவுரைகள் மற்றும் வழிகாட்டலின் படிதான் இயங்குவேன்.


- ஜே.எம்.ஹபீஸ்-

மகாநாயக்கத் தேரர்களது அறிவுரைகள் மற்றும் வழிகாட்டலின் படி இதன் பிறகு தான் இயங்க உள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.(22.6.2017).

அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வரகாகொட ஞானரத்னவை சந்தித் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்-

தாம் முன்வைத்த விடயங்கள் தொடர்பாக அஸ்கிரிய பீடம் மற்றும் பல பிரதான அமைப்புக்கள் அதனை ஏற்று தமது கவனத்தை அதன் பால் செலுத்தி உள்ளதால் அது தொடர்பாக தாம் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

எனவே எதிர் காலத்தில் பிரதான பௌத்த பீடங்களது அறிவுரைக்கு முன் உரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இனிமேல் மகாநாயக்கத் தேரர்களது அறிவுரைகள் மற்றும் வழிகாட்டலின் படிதான் இயங்குவேன். இனிமேல் மகாநாயக்கத் தேரர்களது அறிவுரைகள் மற்றும் வழிகாட்டலின் படிதான் இயங்குவேன். Reviewed by Madawala News on 6/25/2017 11:27:00 AM Rating: 5