Ad Space Available here

பாதிக்கபப்ட்ட அந்தப்பெண்க‌ள் அடையாள‌ அணிவ‌குப்பில் உண்மையையே சொல்லியுள்ள‌தாகவே நாம் கருகிறோம்.ம‌ல்லிகைத்தீவு சிறுமிய‌ர் துஷ்பிர‌யோக‌ ச‌ம்ப‌வ‌த்தை எந்த‌வொரு முஸ்லிம் அர‌சிய‌ல்வாதியும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வில்லை என ம‌ட்டு. ஆய‌ர் க‌லாநிதி ஜோச‌ப் பொன்னையா கூறியிருப்ப‌து க‌வ‌லை த‌ருவ‌துட‌ன் அவ‌ர‌து பொது அறிவையும் கேள்விக்குட்ப‌டுத்துகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

அண்மையில் கௌர‌வ‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு ஆய‌ர் விடுத்துள்ள‌ அறிக்கையில் ம‌த‌த்த‌லைவ‌ர்க‌ள் அர‌சிய‌லுக்குள் இற‌ங்குவ‌து பிர‌ச்சினைக‌ளின் தோற்றுவாயாக‌ இற‌ங்கும் என‌ கூறிக்கொண்டே முழுக்க‌ முழுக்க‌ அர‌சிய‌லையே மதிப்புக்குரிய ஆய‌ர் பேசியுள்ளதன் மூலம் தானும் அரசியல்வாதிதான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.

ம‌ல்லிகைத்தீவு ச‌ம்ப‌வ‌ம் ப‌ற்றி அறிய‌ வ‌ந்த‌ போது அத‌னை முத‌லில் உல‌மா க‌ட்சி க‌ண்டித்த‌துட‌ன் இது விடயத்தில் இனவாதமாக பார்க்காது குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் கைது செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ கோரியிருந்த‌து. அது போன்றே இன்னும் சில‌ முஸ்லிம் அர‌சியல்வாதிக‌ளும் அறிக்கை கண்டித்து விட்டிருந்த‌ன‌ர்.

இவை ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ளில் வெளிவ‌ந்தும் அவ‌ற்றை ப‌டிக்காம‌ல், அல்ல‌து தேடாமல் ஒரேய‌டியாக‌ பிழையாக குற்ற‌ம் சொல்வ‌து ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர் என்ற‌ முறையில் ஆய‌ருக்கு அழ‌கான‌த‌ல்ல‌.

ம‌ல்லிகைத்தீவு ச‌ம்ப‌வ‌ம் முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை பாதிக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ் பெண்க‌ள் பொலிஸ் அடையாள‌ அணி வ‌குப்பில் நிரூபித்துள்ள‌ன‌ர். அப்பெண்க‌ள் வேறு ஏதும் கார‌ண‌த்துக்காக‌ அடையாளம் காணவில்லை என  கூறியிருப்பார்க‌ளோ என‌ ஆய‌ர் ச‌ந்தேக‌ப்ப‌டுவ‌து த‌மிழ் பெண்க‌ளுக்கு இழிவான‌தாகும். அதாவது ப‌ண‌ம் போன்ற‌வ‌ற்றுக்காக‌ இவ்வாறு ந‌ட‌ந்திருக்க‌லாம் என்ப‌தாகவே ஆய‌ரின் க‌ருத்து உள்ளது.

அப்படி இருக்குமாயின் இதையே அப்பெண்க‌ள் த‌மிழ் முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாத‌ ச‌க்திக‌ளிட‌ம் ப‌ண‌ம் வாங்கிக்கொண்டு தாம் முஸ்லிம்க‌ளால் வ‌ல்லுற‌வுக்குட்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தாக‌ முத‌லில் சொல்லியிருக்க‌லாம‌ல்ல‌வா. கார‌ண‌ம் அடையாள‌ அணிவ‌குப்பில் ப‌ண‌ம் வாங்கியிருந்தால் அவ‌ர்க‌ள் ப‌ண‌ம் பெறுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள் என்ற‌ல்ல‌வா தெரிகிற‌து. ஆனாலும் அந்தப்பெண்க‌ள் அடையாள‌ அணிவ‌குப்பில் உண்மையையே சொல்லியுள்ள‌தாகவே நாம் கருதுவதுடன் அவ‌ர்க‌ள் உண்மை பேசும் த‌மிழ் பெண்க‌ள் என்ப‌தும் அவ‌ர்க‌ளை வ‌ல்லுற‌வுக்கு உட்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் த‌மிழ் சினிமா பாணியில் த‌ம்மை முஸ்லிம் என‌ பொய்யாக சொல்லியிருக்க‌லாம் என்ப‌தையும் புரிய‌ முடியாத‌ உல‌கிலா நாம் வாழ்கிறோம்? ஒரு இந்து தொப்பியை போட்டுக்கொண்டு இந்து முஸ்லிம் க‌ல‌வ‌ர‌த்தை ஏற்ப‌டுத்துவ‌தை எத்த‌னை இந்திய‌ சினிமாக்க‌ளில் காட்டியுள்ள‌ன‌ர் என்ப‌து ஆய‌ர் அறியாததா?

அத்துட‌ன் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ரான‌ ஞான‌சார‌வை கைது செய்துதான் விசாரிக்க‌ வேண்டுமா என‌ ஆய‌ர் கேட்டுள்ள‌மை அதிர்ச்சியை த‌ருகிற‌து. எந்தவொரு ம‌த‌த்த‌லைவ‌ர்க‌ளையும் கைது செய்யாம‌ல் விசாரிக்க‌ வேண்டும் என‌ நாட்டில் ச‌ட்ட‌ம் இருக்குமாயின் அத‌னை நாம் வ‌ர‌வேற்போம். ஆனால் அப்ப‌டியொரு சட்டம் இல்லாத‌ நிலையில் அதுவும் பாரிய‌ ப‌ல‌ குற்ற‌ங்க‌ள் செய்த‌தாக‌ குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ரை, நீதிமன்ற விசார‌ணைக்கு அழைக்க‌ப்ப‌ட்டும் வ‌ராத‌ ஒருவ‌ரை, அநியாய‌மாக‌ இன‌ மோத‌ல்க‌ளுக்கு வித்திடுபவ‌ரை கைது செய்யாம‌ல் விசாரிக்க‌ வேண்டும் என‌ ஆய‌ர் கூறுவ‌து எத‌ற்காக‌ என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து. இக்குற்றங்களை ஒரு மௌல‌வி செய்தால் ம‌திப்பிற்குரிய‌ ஆய‌ர் இவ்வாறு நியாயம் சொல்லியிருப்பாரா?

ஆக‌வே ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் அர‌சிய‌லில் ந‌ட‌க்கும் த‌வ‌றுக‌ளையும, அநியாயங்களையும் பார்த்துக்கொண்டிருக்க‌ முடியாது என்ற‌ அடிப்ப‌டையிலேயே ஆய‌ரும் அர‌சிய‌ல் பேசியுள்ள‌மை வ‌ர‌வேற்புக்குரிய‌தாகினும் அவ‌ர் பேசிய‌ அனைத்தும் த‌வ‌றாக‌வும் அரை குறை விள‌க்க‌ம் கொண்ட‌தாகவும்‌ இருக்கிற‌து என்ப‌தையும் இஸ்லாம் ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் க‌ட்சி என்ற‌ வ‌கையில் எம‌து க‌வ‌லையை தெரிவித்துக்கொள்வ‌தோடு ஆய‌ர் விரும்பினால் இவை ப‌ற்றி ஆய‌ருட‌ன் சினேக‌பூர்வ‌மாக‌ சந்தித்து உரையாட‌வும் உல‌மா க‌ட்சி த‌யாராக‌ உள்ள‌து என‌ தெரிவித்துக்கொள்கிறோம்.
பாதிக்கபப்ட்ட அந்தப்பெண்க‌ள் அடையாள‌ அணிவ‌குப்பில் உண்மையையே சொல்லியுள்ள‌தாகவே நாம் கருகிறோம். பாதிக்கபப்ட்ட அந்தப்பெண்க‌ள் அடையாள‌ அணிவ‌குப்பில் உண்மையையே சொல்லியுள்ள‌தாகவே நாம் கருகிறோம். Reviewed by Madawala News on 6/12/2017 01:26:00 PM Rating: 5