Ad Space avaiable

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இரு இளைஞர்கள் பலி.


மீகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொக்கும்புர, களுஹேன வளைவு பகுதியில் தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.

கப்புகொட, பொல்கம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை ஏறாவூர், தேவபுரம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையிலிருந்து விலகியதால் ஏற்பட்ட விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இரு இளைஞர்கள் பலி. மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இரு இளைஞர்கள் பலி. Reviewed by Madawala News on 6/24/2017 10:46:00 AM Rating: 5