Yahya

மல்லிகைத்தீவு பிரதேச சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் - மருத்துவ,சட்ட,சமய,சமூக பார்வையில்.


இன்று பலராலும் பரவலாக பேசப்படுகின்ற விடயமாக இருப்பது கடந்த 29-05-2017 அன்று மல்லிகைத்தீவு பெருவெளியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தபட்ட சம்பவமே.இந்த விடயத்தின் உண்மைத்தன்மை,உண்மையெனில் உரிய குற்றவாளிகள் இதுவரையில் அடையாளம் காணப்படாமல் இருந்தும் ஆரம்பம் முதல் இச்சம்பவம் சில தமிழ் சகோதரர்களால் இன ரீதியான பிரச்சினையாக காட்ட எத்தனிப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

பாலியல் உணர்வு ஆண்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பருவ வயதை அடையும் போது ஆரம்பித்து வயது முதிர்ந்து மரணம் வரைக்கும் தொடரும்.பெண்களை பொருத்தவரை பருவ வயதை அடைந்ததிலிருந்து தொடங்கி மாதவிடாய் நிரந்தரமாக நிறுத்தப்படும் போது குறைந்து கொண்டு செல்லும்.

எந்த பெண்ணையும் கவர்ச்சியாக பார்க்கும் போது ஒரு சராசரி ஆணுக்கு பாலியல் உணர்வு தூண்டப்படும்.இருந்தும் சமய,கலாச்சார கட்டுப்பாடுகள் அவனை தப்பு செய்வதிலிருந்து பாதுகாக்கின்றன. இவைகளை தாண்டி சில மனிதர்கள் காம வெறியர்களாக உலாவுகிறார்கள்.இவர்களின் காம வெறியை தீர்க்க சமயமோ,வயதெல்லையோ,உறவினர்களோ,நண்பர்களோ என்ற வேறுபாடு இல்லை.அதிலும் இவ்வாரானவர்கள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பார்கள்.

இதனால் என்ன செய்கின்றோம் என்று தெரியாமலே செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த எத்தனை தந்தைகளை இன்றைய செய்திகளில் தினம் தினம் காண முடிகிறது.இவ்வாரனவர்களுக்கு மதம்,கலாச்சாரம் இல்லை.எல்லா மதங்களிலும் இவ்வாரனவர்களை காண முடியும்.

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றமை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் அவதானிக்க முடிகின்றன. 18 வயதுக்குட்பட்டவர்களில் மூன்று பிள்ளைகளில் ஒருவர் என்ற அடிப்படையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பரந்துபட்ட விடயப்பரப்பாகும். எனினும் சிறுவர் துஷ்பிரயோகங்களாக பின்வருவனவற்றைச் சுருக்கமாக நோக்கலாம்.

-Verbal Sexual Abuse
  பாலியல் சம்பந்தமான பேச்சுக்கள், நடத்தைகள், புகைப்படங்கள், காணொலிகளைக் காண்பித்தல், இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைப் பிரயோகங்கள்.

(Double meaning words)
-தொடுதல்,கட்டி அணைத்தல்,முத்தமிடல்,ஆண் குறியை பெண் உறுப்பினுள் செலுத்துதல்/செலுத்த முயற்சித்தல் என்பன அடங்கும்.

இவை யாவும் பாரிய குற்றங்களாகக் கருதப்படுவதோடு,சிறுவர்களின் அனுமதியுடனோ அல்லது அனுமதி இன்றியோ செயற்படுத்தப்படும் பட்சத்தில், குறித்த நபருக்கெதிராக கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளடங்களான குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பபடும்.

இவ்வாரான பாலியல் வல்லுறவுகளுக்கு உள்ளாகிறவர்கள் முதலில் உடனே பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும்.சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஏதாவது தடயங்கள் குற்றவாளியினால் விடப்பட்டிருந்தால் அதன் நிலை மாறாது பொலிஸிடம் சொல்ல வேண்டும்.இதன் போது பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக(MLE-Medico legal Examination)வைத்தியசாலையில் பொலிஸாரால் அணுமதித்து சட்ட வைத்திய அறிக்கை விண்ணப்பம் வழங்கப்படும்(MLEF-Medico Legal Examination Form).
சட்ட வைத்திய அதிகாரியினால்(JMO-Judicial Medical Officer) சட்ட வைத்திய பரிசோதனை நடாத்தப்பட்டு சட்ட வைத்திய அறிக்கை பொலிஸாருக்கு வழங்கப்படும்.இவ்வேளையில் வைத்தியசாலையிலிருந்து/பொலிஸ் மூலமாக மேற்படி தகவல் Child Abuse சம்பந்தமான பல அரச நிலையங்களுக்கு அறிவிக்கப்படும்.

இதேவேளை இவ்விடயம் சம்பந்தமாக பொலிஸாரால் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.சட்ட வைத்திய அறிக்கை,பொலிஸ் விசாரணை என்பன அடிப்படையில் குற்றவாளி உறுதிப்படுத்தப்படுமிடத்து அதற்குறிய தண்டனை நீதிமன்றத்தினால் வழங்கப்படும்.இலங்கை சட்டத்தின் படி 18வயதிற்கு குறைந்த ஆண்,பெண் இருவரினது விருப்பத்துடன் உறவில் ஈடுபட்டாலும் அது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படுகிறது.

எல்லா மதங்களிலும் கற்பழிப்பு,பாலியல் துஷ்பிரயோகங்கள் மிக பெரிய குற்றங்களாக கருதப்படுகின்றன.அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தில் இவ்வாரான குற்றங்கள் செய்தவர்கள் திருமண முடிக்காதவர்கள் எனில் பகிரங்கமாக நூறு கசையடி வழங்கி ஒரு வருடத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும்.

திருமணமான ஆண் எனில் பகிரங்கமாக கல்லெறிந்து கொல்ல வேண்டும்.இஸ்லாமிய வரலாற்றில் உலகின் பெரும்பகுதியை ஆண்ட உமர் (றழி) அவர்களின் ஆட்சி காலத்தில் அவரது திருமணமாகாத மகன் கற்பழிப்பு குற்றத்திற்காக கலிபா அவர்களால் கசையடி வழங்குகின்ற போது இடையில் மரணிக்க மிகுதி கசையடி  இறந்த சடலத்திற்கு வழங்கி தண்டனை நிறைவேற்றினார்கள்.

இஸ்லாம் இவ்வாரான தண்டனைகளை வழங்குவதன் மூலமாகவே இஸ்லாமிய நாடுகளில் பாலியல் ரீதியான குற்றங்கள் மிக குறைவாக காணப்படுகிறது. இங்கு கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் நள்ளிரவு ஒரு மணி,இரண்டு மணிக்கு எவ்வித ஆண் துணையுமின்றி பல நாடுகளை சேர்ந்த பல பெண்கள் சுதந்திரமாக உலாவுவதை கண்டு பலதடவை நான் வியந்ததுண்டு.

மூதூர் அதை சூழவுள்ள பல பிரதேசங்கள கடந்த கால யுத்த சூழ்நிலையினால் பல உறவுகள்,சொத்துக்கள் என இழந்து சொல்ல முடியாத பல துயரத்தை அணுபவித்தார்கள்.இப்போது தான் அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்குள்ள முஸ்லிம்-தமிழ் மக்களுக்கிடையே நீண்ட கால உறவு உள்ளது.தமிழ் மக்கள் அவர்களுடைய உற்பத்தி பொருட்களை முஸ்லிம்களிடத்தில் விற்றல்,முஸ்லிம்களின் வியாபார பொருட்களை தமிழ் மக்கள் வாங்குதல் என இரு சமூகமும் விரலும்,சதையும் போல வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்படி சிறுமிகள் துஷ்பிரயோகம் சம்பவம் நடந்த நாள் முதல் இன்று வரை ஊடகங்கள்,சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் தமிழ் சகோதரர்களால் இது முஸ்லிம் இளைஞர்களால் தமிழ் சிறுமிகள் திட்டமிட்டு கற்பழிக்கப்பட்டார்கள் என செய்திகள் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன.இதிலே சிலர் போலி முகவரியிலே எழுதுகிறார்கள்.

சிலர்கள் நேரடியாகவே எழுதுகிறார்கள்.இதிலும் குறிப்பாக தமிழ் சமூகத்தில் மிகவும் பொறுப்பான பதவியிலுள்ளவர்கள்,மரியாதைக்குறியவர்கள் என பலருமே சமூகத்தை சிந்திக்காது பொறுப்பில்லாமல் கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.இதிலும் சில முகநூல்களிலே பழைய சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தும் புகைப்படங்களை வெளியிட்டு கற்பழித்து கொலை செய்து விட்டதாக செய்தி பரப்புவது மிகவும் மன வேதனை அழிக்கிறது.

இவைகளுக்கு பின்னால் பெரியதோரு சதித்திட்டம் அரங்கேறுகிறது.இதிலே பெரும்பாலும் பங்கு வகிப்பது வெளிநாடுகளிலுள்ள தமிழர்களே.பாவம் இதற்கு இங்குள்ள அப்பாவி தமிழர்கள் துரும்பாக மாறுகிறார்கள்.

வெளிநாடுகளில் இலங்கையில் நடக்கின்ற உள்நாட்டு யுத்தத்தை காட்டி பணம் வசூலித்தவர்கள்,தமக்கு சொந்த நாட்டில் இருக்க முடியாது வெளிநாடுகளில் குடியுரிமை வேண்டும் என திரிந்தவர்களுக்கு நாட்டில் தற்போது சமாதானம் நிகழ்ந்துள்ளதால் இவற்றை செய்ய முடியாதுள்ளது.

இதனால் உள்நாட்டிலே இவ்வாரான விடயங்களை ஏற்படுத்தி தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் இனப்பிரச்சனையை ஏற்படுத்தினால் தான் தமது இலக்குகளை அடையளாம் என்பதற்காக இங்குள்ள மக்களை பற்றி சிந்திக்காது தமது நாடகங்களை அறங்கேற்றுகிறார்கள்.

தமிழ் விடுதலை இயக்கம் நியாயமான காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆரம்பத்தில் கனிசமான அளவு இருந்தது.இன்றும் மாவீரர்கள் துயிலும் இடங்களில் எமது முஸ்லிம் சகோதரர்களின் பெயர்களை காணலாம்.பின்னர் வந்த காலங்களில் சிறப்பு மிக்க தமிழ் கல்விமான்களின் கொலைகள் போன்றவற்றால் தமிழ் மக்களே இப்போராட்டத்தை எதிர்க்க தொடங்கியதுடன் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம்,காத்தன்குடி பள்ளிவாசலில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களின் கொலை ...போன்ற பல காரணங்களால் முஸ்லிம் மக்களால் வெறுக்கப்பட்டார்கள்.

இருந்த போதும் முஸ்லிம்கள் இன்றும் தமிழ் மக்கள் மீது நல்ல உறவை பேணுவதையே விரும்புகிறார்கள்.

மல்லிகைத்தீவு சிறுமிகளின் துஷ்பிரயோக விடயம் ஒரு இனம் சார்ந்த பிரச்சனையல்ல.இது சிறுமிகள் துஸ்பிரயோகம் என்ற ரீதியில் இன்று இவர்களுக்கென்றால் நாளை எனது மகளுக்கோ/சகோதரிக்கோ/உறவினர்களுக்கோ ஏற்படலாம் என நினைத்து எல்லோரும் ஒருமித்து குற்றவாளியை கண்டு பிடிப்பதுடன் இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.இதில் எந்த முஸ்லிம் மகனுக்கும் மாற்று கருத்துக்கு இல்லை.

நீங்கள் முக நூலில் எழுதுவது ஏதோ தோப்பூரில் முஸ்லிம்களெல்லாம் ஒன்று கூடி இளைஞர்களிடம் தமிழ் பிரதேசங்களுக்கு சென்று தமிழ் சிறுமிகளை கற்பழித்து வாருங்கள் என சொல்வது போன்றே உங்கள் போலியான ஆதங்கங்கள் விளங்குகிறது.

சிலரின் இதுபோன்ற நடவடிக்கையால் அன்றாடம் தமிழ்,முஸ்லிம்களின் பிரதேசங்களுக்கு சென்று தொழில் நடாத்தி வாழ்க்கை நடாத்தி வருகின்ற அப்பாவி தமிழ்,முஸ்லிம்கள் இன்று பயத்தில் வீடுகளிலே முடங்கி இருக்கிறார்கள்.சம்பூர் போன்ற பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன் வேளாண்மை,பல இலட்சம் பெறுமதியான கால்நடைகளுடன் செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள் யுத்தத்தில் இவற்றையெல்லாம் இழந்து பலர்இவற்றை நினைத்து மனநோயாளிகளாக மாறி இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாரான வேளையில் வெளிநாடுகளிலே பஞ்சனையில் படுத்து உறங்கும் ஒரு சில சுயநலவாதிகள் இம்மக்களை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு செல்ல எத்தனிக்கிறார்கள்.

மூதூர்,தோப்பூர் முஸ்லிம் மக்கள் யுத்தத்தால் நன்கு பாதிக்கப்பட்டாலும் அதைவிட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டத்தை நன்கு உணருவார்கள்.இன்னும் சில மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.பலர் செருப்பு கூட இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் வருவார்கள்.

இவ்வாரனவர்கள் தமது உற்பத்தி பொருட்களை முஸ்லிம் பிரதேசங்களுக்கு விற்பனைக்காக கொண்டுவரும் போது அவர்களின் நிலமை அறிந்து அவர்கள் சொல்லும் விலையை விட மேலதிகமாக பணம் கொடுத்து கொள்வனவு செய்யும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.மூதூர் தள வைத்தியசாலை தரமுயர்வு விடயத்தில் முஸ்லிம்களை விட பாட்டாளிபுரம்,சந்தோசபுரம் போன்ற மக்களின் நன்மையை முன்னிறுத்தியே நான் உற்பட இவ்விடயத்தில் என்னோடு  பயணிக்கின்ற எல்லோரினதும் மனநிலை.

ஏனெனில் மூதூர் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக வேறு இடங்களுக்கு மாற்றுகின்ற போது இவர்கள் சொல்லும் வார்த்தைகள்,பொருளாதார நிலமைகள் இன்னும் மனதை அழ வைக்கிறது.

கட்டார் வாழ் மூதூர் சமூகத்தினால் எல்லா சமூகத்தையும் சேர்ந்த தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதமாதம் புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்றை தொடங்கியிருந்தோம்.இதன்போது மேற்படி சங்கத்திலுள்ள உறுப்பினர் ஒருவர் என்னிடம் சொன்னார் நான் மேலதிகமாக இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி செய்வேன் அவ்விருவரும் தமிழ் மாணவர்களாகவே இருக்க வேண்டும் என்றார்.இது போன்ற பல சம்பவங்களை எழுதலாம்.

எனவே முஸ்லிம்-உறவுகளை பிரிப்பதற்கு பல சதிகள் அறங்கேறுகின்ற போதும் பொறுப்பு வாய்ந்தவர்கள்,பொதுமக்கள் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டு பிடிக்க எல்லோரும் உதவுவதுடன் இவர்களுக்கு வழங்கும் தண்டணை பலருக்கு பாடமாக அமைய வேண்டும்.

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar.
மல்லிகைத்தீவு பிரதேச சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் - மருத்துவ,சட்ட,சமய,சமூக பார்வையில். மல்லிகைத்தீவு  பிரதேச சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் - மருத்துவ,சட்ட,சமய,சமூக பார்வையில். Reviewed by Madawala News on 6/05/2017 09:09:00 PM Rating: 5