Kidny

Kidny

உணர்வு இழந்து விட்டதா முஸ்லிம் சமூகம்?


சிங்கள பௌத்த  தீவிரவாதம் கூர்மை அடைந்து முஸ்லிம்களுக்கு எதிரான  பயங்கரவாத செயற்பாட்டை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது .

இலங்கையில்  முஸ்லிம்சமூகம்  சிதறிய சிறுபான்மையாக   வாழ்வதை  ஒரு பலகீனமாகக் கருதி அப்பாவி முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் மீதும் அதன் இறைநம்பிக்கை மீதும் தொடுக்கப் படும் சின்னத்தனமான அழித்தொழிப்பு  நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .

சிங்கள சமூகத்தினால்   வணங்கப்படும்   தேரர்களுக்கு  எதிராக சட்டநடவடிகைகளை மேற்கொண்டால்  பெரும்பான்மை இனத்தின் செல்வாக்கை இழக்க நேரிடும்  என்ற அச்சத்தினால்     ஆட்சியாளர்கள் மௌனம் காத்துவருகின்றனர் .

நாட்டில் இடம் பெற்றுவரும்  சம்பவங்களை உற்று நோக்கும் போது இரகசியமாக  இயக்கப்பட்டுவரும்  ஒரு பயங்கர வாத இயக்க ஒழுங்கு  ஒன்றை நோக்கி  இனவாதக் நகர்ந்துள்ளது புலனாகின்றது.

பொதுபல சேனாவின் சில தேரர்களுக்கு  மியன்மார் மற்றும் சைனா ,இலங்கையின்  தெற்கில் உள்ள காடுகளில் இராணுவத்தில் இருந்து  விலகிய வீரர்களிநூடாக ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படும் செய்திகள் புலனாய்வுத்துறையினரின் கண்களில் படாமல் இல்லை   இனவாத  தேரர்களின் காட்டுக் கூச்சலுக்கும்  கோழைத்தனமான  செயற்பாடுகளுக்கும்  பின்னால் வெளிநாட்டு புலனாய்வுத்துறையினருக்கும் நெருக்கமான  தொடர்புகள் இருக்கின்றன  தெற்காசிய நாடுகளை  ஆட்டிபடைக்க நினைக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளின்  கைகள் இதன் பின்னணியில்  செயற்படுவதற்கான ஆதரங்களே சிங்கள தமிழ் ஆட்டக்களில்  அண்மைக் காலங்களில்  கட்டிவிடப்பட்ட  இஸ்ரேலியக் கொடிகலாகும்

சர்வதேசம் கையாண்டு வரும் புதிய  யுக்தியான    இனங்களை பிரிப்பதன் னூடாகவே தங்கள் நலன்களை சாதித்துக் கொள்ளும்  திட்டத்தின் விரிவாக்கம் இது என்பதில் சந்தேகம் இல்லை

அமைதியோடும் சகிபுத்தன்மை யோடும்  வாழும் ஒரு இனத்தினை நோக்கி ஒரே நேரத்தில்  இரு இனங்கள் இனத்துவ அடிப்படையில் பிரச்சனைகளை  ஏற்படுத்த முனைவது நாட்டை  அழிவின் விளிம்புக்கு இழுத்துச் செல்லும்  என்பதில் சந்தேகம் இல்லை

நாட்டிலுள்ள  தமிழ் சிங்கள ஊடகங்களும்  நாட்டின் இறையாண்மைக்கு சவாலாக மாறிவரும் ஒரு பிரச்சினையை திரிவு படுத்தி மக்களை இனவாத கருத்தியல் தாகத்தினை உண்டு பண்ணும் செயற்பாடுகளையே  செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது .

அரசியல் ,சட்டம் ,ஊடகம் ,இனவாதத்தை நோக்கி சம கோட்டில் பயணிப்பதை  கூர்ந்து கவனிக்கும்  ஒருவரால் புரிந்து கொள்ளமுடியும்

சர்வதேசத்தில்  மேல்  எழுந்துள்ள இஸ்லாமிய  எதிர்ப்பு  அரசியல்  முன்னெடுப்புக்களை  மேற்கொள்ளும்   நாடுகளுடன்  இலங்கையும்  இணைந்து  கொண்டுள்ள   செய்தியை  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்  தர்மத்தையும் சகிப்புத்தன்மையையும்  போத்தித்த புத்த பெருமானின் பெளத்த நிகழ்வுகளுக்கு  இந்தியாவின்  சிறுபான்மை  இனத்தின்  இரத்தக் கரை படிந்த  மோடியை அழைத்து வந்ததன் மூலம் சிங்கள மக்களுக்கும்  சர்வதேசத்திற்கும்  இந்த அரசு  ஒரு செய்தியை  சொல்லி இருக்கிறது .

இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரம் எரிக்கப் படுவதாக  மாத்திரமே  இப்போது நாட்டில் பார்கபடுவதும்  பேசப்படுவதும்  கவலை தரும்  விடயமாக இருந்தாலும்  இது நாட்டின்  பொருளாதாரத்தின்  மீது   வைக்கும்  தீக்கு சமனானதாகும்  இது முஸ்லிம்களை பாதிக்கும் என்பதை விட  முழு நாட்டுமக்களையும்  பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை  பிச்சைப் பாத்திரத்தோடு  நாடு நாடாக ஏறி இறங்கும்  பிரதமரும் ஜனாதிபதியும்  இது ஒரு  தேசிய பிரச்சினை என்பதை ஏன் இதுவரை  உணர மறுக்கின்றனர்.

ஏன் முஸ்லிம் சிவில் சமூகம் மௌனித்துப் போனது

மட்டகளப்பில்  தமிழ் முஸ்லிம்களுக்கு  எதிராக இனவாதத்தை கக்கிய  விகாராதிபதி சுமங்கள தேரர் ஏன் அடக்கி வாசிகத்தொடங்கினார்

இவரின் செயற்பாடுகளைக் கண்டித்து தமிழ் அரசியல் தலைமைகளோடு சிவில் சமூகமும் இணைந்து தெருவில் இறங்கி போராடத் துவங்கியது  மறுநாளே பத்திரிகையாளர்களை அழைத்த தேரர் தனது மடமையினால் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் இனிமேல் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார் முஸ்லிம்கள்  சந்தித்தது போன்ற எந்த ஒரு பிரச்சினைகளையும் கண்டு கொள்ளவில்லை

ஆனால் முஸ்லிம் சமூகம் கோடிக்காணக்கான சொத்துக்களையும் அல்லாஹ்வின் இல்லத்தின் மீதான தாக்குதல்களையும் சந்தித்தும் கூட இன்னும் இன்னும் மௌனம் காத்துவருவது  அடிமைத்தனத்தை பிரதி பளிகின்றது . முஸ்லிம் அரசியல் வாதிகளின் பாராளுமன்ற  பேச்சுப் போட்டிகளை நம்பியா முஸ்லிம் சமூகம் தூங்கிக் கொண்டிருகிறது .அல்லாஹ்வின் இல்லத்தின்  மீது கைவைத்த பிறகுமா நீங்கள் மௌனம் காத்துவருகிரீர்கள் அகிம்சையாக போராடுவது எமது உரிமை இல்லையா ஆகக் குறைந்த எதிர்ப்பைக் கூட  காட்ட மறுக்கிறீர்களா ?

 நாளுகொரு கடையாக தீப்பிடிக்கும் நிலையில்  கேற்பார் அற்ற அனாதையாக இருக்கிறோம்  என்று மட்டும் ஆதங்கத்தோடு  விட்டு விடுகிறீர்கள் நிறுத்தப் படும்வரை தெருவுக்கு இறங்கிப்பாருங்கள்  நீங்கள் அழைத்தும் வராதவர்கள் உங்கள் காலடிக்கு  வருவார்கள் முஸ்லிம்களே நீங்கள் படுத்த படுக்கையில் உயிர் பிரிவதை விட்டும்  வெட்கப்படுங்கள் நீங்கள் மௌனித்துப் போனதன் மூலம் எரிந்து சாம்பலான கடைகள் உரிமையாளர்களின்  தனிப்பட்ட பிரச்சினையாக மாறி வருகிறது .

உலமாக்களே தமிழ் சமூகம் அநியாயமாக கொல்லப்பட்டபோது இஸ்லாம் நமக்கு கற்றுத்தந்த  மனிதாபிமானத்தை  கால்களுக்கு செருப்பாக அணிந்து கொண்டு அரபு தேசங்களுக்கு பறந்து அந்த மக்களுக்கு எதிராக வாதாடிநீர்களே ஜெநீவாவரை சென்று  நாட்டுக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு ஒரு சமூகத்தின் சாபாத்தை சுமந்து வந்தீர்களே!

இப்போது சமூகம் தீயில்  எரிகின்ற போது மட்டும் மௌனமாக குனூத் ஓதுமாறு கட்டளை பிரப்பிகிண்றீர்கள் உலகில்   மீள்எ ழுட்சிபெற்றுவரும் முஸ்லிம் உம்மாவிடம் முறை இடுவதற்கு நீங்கள்  ஏன் முன் வரத்தயங்கு கிறீர்கள்
முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை உங்களின் அச்சத்தின் காரணமாக குழிதோண்டி புதைத்து விடாதீர்கள்  

முஹம்மது பாயிஸ்  பிரித்தானியா
உணர்வு இழந்து விட்டதா முஸ்லிம் சமூகம்? உணர்வு இழந்து விட்டதா  முஸ்லிம் சமூகம்? Reviewed by Madawala News on 6/09/2017 09:19:00 PM Rating: 5