Ad Space Available here

ஒற்றைத்தலை வலியும் நோன்பும்.


ஒற்றைத்தலை வலி என்றால் என்ன?
--------------------------------------
மூளையில் ஏற்படுத்தப்படுகின்ற விஷேட உடலியியல் மாற்றத்தினால்(Physiological Changes)ஏற்படுத்தப்படுகின்ற ஒருபக்க தலை வலியாகும்.இது வெளிச்சம்,சத்தம்,வாசனை போன்ற புலன்களுடன் தொடர்புள்ளதுடன் அறிகுறிகள் பெரும்பாலும் பின்வருமாறு அமையும்.
ஆரம்ப 15நிமிடங்கள் கண் பார்வையில் மாற்றத்துடன்(குறிப்பிட்ட சில நேரம் பார்வை தெளிவின்மை,கண்ணை சுற்றி வலி,வெளிச்சம் பார்ப்பதில் சிரமம்,தலையை சுற்றி ஏதோ ஊர்வது போல மாற்றம்...) அதை தொடர்ந்து ஒரு மணித்தியாளத்தில் தலையின் ஒரு பக்கம் துடிப்பது போன்ற(Throbbing)வலி உணரப்படும்.இதனுடன் குமட்டல்(Nausea),வாந்தி(Vomiting) போன்றவையும் அறிகுறிகளாக காட்டப்படும்.

உலக சனத்தொகையில் ஏறத்தாழ 25%மானவர்கள் ஒற்றைத்தலை வலியினால் அவதிப்படுகிறார்கள்.ஆண்களை விட பெண்களே அதிகம்(3:1).பரம்பரையில் இந்நோயின் தாக்கம் அடுத்த சந்ததியினருக்கும் இது கடத்தப்படுகிறது.

ஒற்றைத் தலை வலி தாங்க முடியாத/சகிக்க முடியாத நோயாகும்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கூறுவது தமது எதிரிக்கு கூட இவ்வாரான நோய் வந்து விடக்கூடாது என்பார்கள்.இதனால் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுடன் சிலர் இதன் மூலம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து இந்நோயின் உச்சத்தில் தற்கொலை செய்பவர்களும் உண்டு.இவ்வேதனையின் போது இன்னொருவருடன் பேசுவதற்கோ,வேறோருவர் இவர்களுடன் பேசுவதையோ விரும்பமாட்டார்கள்.சிலர் இவ்வேதனையின் உச்சத்தில் தலையை இருக்கமாக துணிகள் போன்றவற்றினால் கட்ட முயற்சிப்பார்கள்.சிலரது அலுவலக,பாடசாலை போன்றவற்றின் அடிக்கடி Absentற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.

சிலருக்கு ஒவ்வெரு நாளும் அறிகுறிகள் இருக்கும்.சிலருக்கு கிழமையில் ஒரு தடவை/மாதத்தில் ஒரு தடவை/வருடத்தில் ஒரு தடவை என அமையும்.பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு ஓரிரு நாற்களுக்கு முன்னதாக(Premenstrual) இதன் அறிகுறிகள் கூடுதலாக அமையும்.

ஒற்றைத்தலை வலியை தூண்டும் காரணிகள்
--------------------------------------
 •Cheese,பால் மா உற்பத்தி பொருட்கள்(Diary Products)
 •Chocolate வகைகள்
 •Caffeine அடங்கிய பொருட்கள்
 •மதுபான வகைகள்(Alcohol)
 •சில மருந்து வகைகள்(குறிப்பாக பெண்கள் குடும்ப திட்டத்திற்கு பாவிக்கின்ற (Oral Contraceptive Pills)Mithuri போன்ற மாத்திரைகள்
 •பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்
 •செயற்கையான சுவையூட்டிகள்
 •Anxiety,Stress(பயம்,மன அழுத்தம்)
 •பிரயாணம்
 •முறையான தூக்கமின்மை,அதிக தூக்கம்
•உடற்பயிற்சி(Exercise)
•மிதமிஞ்சிய வெளிச்சம்,சத்தம்,வாசனை

ஒற்றைத் தலை வலிக்குறிய தீர்வு என்ன?
--------------------------------------
 •வைத்திய ஆலோசனை(இதன்போது அறிகுறிகள் ஏற்படும் தன்மைக்கேற்ப சிகிச்சைகள் மாறுபடும்.அறிகுறி அடிக்கடி ஏற்பட்டால் தொடர்ச்சியாக மாத்திரை பாவிக்க வேண்டும்.அறிகுறிகள் அடிக்கடி இல்லாவிடில் தேவையான போது மாத்திரம் மாத்திரை பாவித்தால் போதுமானதாகும்)

 •மேற்கூறிய ஒற்றைத் தலை வலியை தூண்டும் காரணிகளை தவிர்த்தல்.
 •யோகா,தியானம்(Yoga,Meditation)
 •Special Muscle relaxation Exercise.

ஒற்றைத் தலைவலியும் நோன்பும்
--------------------------------------
ஏழைகளின் பசியை உணர்தல்,தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்தல் என்பன நோன்பனாது இஸ்லாமியர்கள் மீது கடமையாக்கப்பட காரணமாக அமைகிறது.நோயாளிகளாக இருப்பவர்களுக்கு நோன்பு கடமையல்ல.பின்னர் அதற்கு மாற்றிடாக ஆரோக்கியமாக இருக்கும் காலங்களில் நோற்க முடியும்.இஸ்லாம் ஒரு மனிதனை அவனது தகுதிக்கு அப்பால் வணக்க வழிபாடுகளை சிரமப்படுத்துவதில்லை.இதனாலேயே எல்லா கடமைகளிலும் பல சலுகைகளையும் மாற்றிடையும் இஸ்லாம் தந்துள்ளது.


நோன்பு காலங்களில் பகல் வேளையிலும்,நோன்பு திறந்த பின்னரும் சிறிதளவிலான தலைவலியை பலரும் உணருவார்கள்.இவை எவ்வித மாத்திரைகளுமின்றியே குறித்த நேரத்திற்குள் பெரும்பாலும் குணமாகிவிடும்.

நோன்பு வேளையில் இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவை சீரமைக்க பல வகையான ஓமோன்கள் தொழிற்படும்.இதன் போது உருவாக்கப்படுகின்ற இரசாயன பதார்த்தங்கள்,தண்ணீர் இழப்பு போன்றவை ஒற்றைத் தலை வலியை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.சிலரின் கருத்துப்படி நோன்பின் போது உடம்பிலுள்ள மேலதிக கொழுப்புக்கள் பயன்படுத்தப்படுவதனால் ஒற்றைத் தலை வலியின் தாக்கம் குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

பெரும்பாலானவர்களுக்கு ஆரம்ப நோன்புகள் ஒற்றைத்தலை வலியின் தாக்கம் கூடுதலாக இருந்தாலும் ஒரு சில நாற்களில் உடம்பு இசைவாக்கப்படும் போது பிறகு அறிகுறிகள் தெரிவதில்லை.ஆனால் சிலருக்கு நோன்பு பிடித்து முழு நாற்களுமே இவ்வேதனையை அணுபவிக்க நேரிடும.இதனால் இவர்கள் எந்நேரமும் தூங்குவதுடன் பர்ழான தொழுகைகளையும் தொழ கிடைப்பதில்லை.இவ்வாரான ஒற்றைத்தலை வலி உடையவர்கள் நோன்பு பிடிக்காமல் இருக்க மார்க்கத்தில் அணுமதி உண்டு.

பல மடங்கு நன்மைகளை அள்ளி தரும் இப்புனித றமழானில் சிறிய சிறிய நோய்களுக்காக காரணமின்றி நோன்பை விடுபவர்களை சமூகத்தில் பரவலாக காணலாம்.றமழானில் விடுபட்ட நோன்புகளை றமழான் அல்லாத காலங்களில் நோற்கும் போது அதற்குறிய கடமை நிறைவேறுகின்றது தவிர றமழானில் இருக்கின்ற சிறப்பு மற்றைய காலங்களில் கிடைப்பதில்லை.

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar.
ஒற்றைத்தலை வலியும் நோன்பும். ஒற்றைத்தலை வலியும் நோன்பும். Reviewed by Madawala News on 6/07/2017 02:40:00 PM Rating: 5