Ad Space avaiable

பசுவுக்காக மனிதனை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கிறேன்.

பசுப்பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு மனிதரை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மனிதர்களைக் கொல்வதல்ல பசுப்பாதுகாப்பு என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

அகிம்சைக் கொள்கையை வாழ்க்கை முறையாக கொண்டுள்ள இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை என்று குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

மேலும் பசுப்பாதுகாப்பை உண்மையில் செயல்படுத்திக் காட்டியவர் மகாத்மா காந்தி என்றும் மோடி கூறியுள்ளார். 

பசுப்பாதுகாப்பின் பெயரால் இப்போது நடக்கும் செயல்களை காந்திஜி ஒருபோதும் ஏற்க மாட்டார் என்றும் பிரதமர் கூறியுள்ளார். 

சமீப நாட்களில் இந்தியாவில் பசுவதை பெயரில் பல முஸ்லிம்கள் தாக்குதலுக்கும், படுகொலைக்கும் ஆளாகி உள்ள நிலையில் மோடி இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

பசுவுக்காக மனிதனை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கிறேன். பசுவுக்காக மனிதனை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கிறேன். Reviewed by Madawala News on 6/29/2017 01:50:00 PM Rating: 5