tg travels

இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்களை ஐ. நா சபையில் பரப்புரைசெய்ய அறிவிக்கவும்.

இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக 
இனவாதிகளால் நடாத்தப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராக  ஐ. நா. சபையில் பரப்புரைசெய்வதற்காக  அக்குறணை முயிஸ் வஹாப்தீன் ஏற்பாடுகளை மேற்கொள்கிறார்.

இம்மாதம் 6ம் திகதி முதல் இம்மாதம் 23ம் திகதி வரை நடை பெறவுள்ள ஐ.நா மனித உரிமைஅமைப்பின் 35வது அமர்வில் பிரத்தியேக உபமாநாடு மூலமாக  இப்பரப்புரையை நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக   ஜெனீவாவை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைச்செயற்பாட்டாளர் முயிஸ் வஹாப்தீன் எமது செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார். 

வன்முறைகளால் இலக்கு வைக்கப்பட்டிருக்கும் இலங்கை முஸ்விம்களின் பள்ளி மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தொடரான தாக்குதல்களைஇன்றைய அரசு கடந்த கால அரசைப்போலவே பாராமுகமாக இருப்பதால் இலங்கை முஸ்லிம்கள் பெரும் மனவேதனை அடைந்துள்ளனர், மட்டுமன்றி சூழ்ச்சியாளர்களுக்கெதிராக இப்புனித ரமழான் மாதத்தில் தமது இரு கரங்களையும் ஏந்தியுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.  

பள்ளிகள், மற்றும் வியாபார நிலையங்களை தாக்கி வரும் இனவாத கும்பல்கள் குறித்து பல நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் செய்தும் இது வரை எந்த வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது சாக்குப் போக்குச் சொல்லும் அரசின் நடவடிக்கை மிகவும் வேடிக்கையானது.  

அண்மைக்காலமாக நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சரியான மற்றும் தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த சில தகவல்கள் இப்பரப்புரைக்கு மிகவும் தேவைப்படுவதால் தயவு செய்து இந்த 0033651778078 வட்சப் மூலம் சகோ.முயிஸ் வஹாப்தீன் அவர்களை தாக்குதலுக்கு உள்ளான பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் வியாபார உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளவும்.

இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்களை ஐ. நா சபையில் பரப்புரைசெய்ய அறிவிக்கவும். இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்களை ஐ. நா சபையில் பரப்புரைசெய்ய அறிவிக்கவும். Reviewed by Madawala News on 6/06/2017 12:15:00 PM Rating: 5