Yahya

முஸ்லிம்கள் மீதான இன்றைய தாக்குதல் திட்டமிட்ட இன அழிப்பாகும்.


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
முஸ்லிம்கள் மீதான இன்றைய தாக்குதல் திட்டமிட்ட இன அழிப்பாகும்  பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் எச்சரிக்கை.

முஸ்லிம் மக்கள் மீது கூட்டு மொத்தமான அத்துமீறல்களை மேற்கொள்ளாது நாளுக்கு நாள் சிறுகச் சிறுகவும் அங்குமிங்குமாக பௌத்த - சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளின் கெடுபிடி தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு தீர்வு காணத்தெரியாத எமது முஸலிம் பாராளுமன்ற உறுப்பிணர்கள் 21 பேர் இருப்பது எமக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது' என நாபீர் பௌண்டேசன் இஸ்தாபக தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தெரிவுத்துள்ளார்.

 முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது :-

நேற்று முன்தினம் நுகேகொட, நேற்று மகரகம, இன்று மருதானை என்ற அடிப்படையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலயங்களை அழிப்பதிலும், முஸ்லிம்களின் மதஸ்த்தலமான பள்ளிவாசல் மீது சேதங்களை விளைவிப்பதிலும் ஒரு அன்றாட நிகழ்வாக மேற்கொள்ளப்படுவதை நாம் அவதாணிக்கின்றோம்.

இத்தகைய அடாவடித்தனம் என்பது எதர்சியாக நடைபெறுகின்ற ஒன்றல்லாமல் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சதி நடவடிக்கை என்பதை சந்தேகங்களுக்கு அப்பால் புரிந்து கொள்ளக்கூடிதாக இருக்கின்றது.
ஆனால் எமது மக்கள் பிரதிநிதிகள் சாட்டுக்கு இது பற்றி கண்டன அறிக்கைகளை விடுவதோடு அமைதியாக இருந்து வருகின்றனர். தேவையான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கத் தெரியாத எமது மக்கள் பிரதிநிதிகள் நமக்கு வாய்த்திருப்பதானது நமது விரல்களைக் கொண்டே எமது கண்களைக் குத்திக் கொள்வதற்கு ஒப்பானதாகும். நாம் நமது அரசியல் அதிகாரத்தை கையளிப்பதற்கு முன்னர் அவர்களின் கடந்த கால நடவடிக்கைகளை நிறுத்துப்பார்க்காது தொடர்ந்தும் அவர்களையே நமது பிரதிநிதிகளாக ஆக்கிக் கொள்ளும் கையாலாகாத நிலைதான் இதுவாகும்.

இனிவரும் காலங்களிலாவது எமது மக்கள் இது குறித்த விடயங்களில் அவதானங்களை அதிகம் செலுத்த வேண்டும். பாரிய கலவரங்களாக நடைபெறாமல் சிறு சிறு நிகழ்வாக முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்துவது பெரிய அளவில் பேசப்பட்டு முஸ்லிம்கள் மீது ஆக்கிரமிப்பு நடக்கின்றது என்பதை பேசுவதை தடுப்பதற்கான ஒரு வழிமுறையில் நின்றுகொண்டு இத்தகைய ஈனச்செயல்கள் நம்மீது நடந்த வண்ணம் உள்ளன. இவற்றை சரிகட்ட தெரியாதவர்களாக எமது எம் பிக்கள் இருப்பது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாகும்.

முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தை வளைக்கத் தெரியாவிட்டால், இவர்கள் தமது பதவிகளை துறந்து தமது இயலாமையை பகிரங்கப்படுத்திவிட்டு அரசியலிலிருந்து ஒதுங்கி விட வேண்டும். இதுதான் ஆர்வமும் துடிப்புமுள்ள காரியமாற்றும் வலுவுடைய புதியவர்களின் வருகைக்கு  இடமளிப்பதுதான் கையாலாகாத நிலையில் உள்ள இன்றைய எமது பாராளுமன்ற பிரதிநிதிகள்  அவர்களுக்கு வாக்கலித்து பாராளுமன்ற கதிரையில் உட்கார வைத்த மக்களும் செய்யும் கைமாறு என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மீதான இன்றைய தாக்குதல் திட்டமிட்ட இன அழிப்பாகும். முஸ்லிம்கள் மீதான இன்றைய தாக்குதல் திட்டமிட்ட இன அழிப்பாகும். Reviewed by Madawala News on 6/11/2017 11:24:00 AM Rating: 5