tg travels

கல்விக்கு வறுமையை தடையாகக் கருதக் கூடாது. வறுமையிலும் சாதனை படைத்த பல வரலாறுகள் உண்டு.


-ஜே.எம்.ஹபீஸ்-

வறுமை ஒருவனின் கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று பொருளாதார, வங்கியியல் விரிவுரையாளர் ஆசிக் எம். நியாஸ் தெரிவித்தார்.

கண்டி பதியுதின் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற ஒரு வைபவத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய மாகாண சபை அங்கத்தவர் எம்.டி.எம். முத்தாலிப் அவர்களைத் தலைமையாகக் கொண்ட முத்தாலிப் அறக்கட்டளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

மூன்று பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் செயலாற்றினால் வாழ்வில் வெற்றி பெறமுடியும். முதலாவதாக என்னாலும் முடியும் என்ற மனப்பாங்கு மாணவர் மத்தியில் வளர வேண்டும். அது வெறுமனே வளராது, வளர்க்கப்பட வேண்டும்.

அதுவும் அக்குழந்தையயைப் பெற்ற தாயினால்தான் வளர்க்க முடியும். அது ஒரு முறை மட்டுமல்ல, பல முறை திரும்பத் திரும்ப வழியுறுத்தியதன் காரணமாக வாழ்வில் வெற்றி பெற்று உலகமே வியக்கத்தக்க சாதனை புரிந்தோர் வரலாறு அனேகம் உண்டு.

கடந்த 1958 மற்றும் 60ம் ஆண்டு காலப்பகுதியில் ஒலிம்பிக் பதக்கம் வென்று உலகிலே மிக வேகமான பெண் என்ற பெருமையைத்  தட்டிக்கொண்டவர் ஒரு போலியோ நோயாளி. சிறுவயதில் சிறுபிள்ளைவாதம் என்ற போலியோ நொயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத அக்குழந்தைக்கு உன்னால் நடக்க முடியும் என்ற தன்நம்பிக்கையை அவராது தாயார் அக்குழந்தைக்கு ஏற்படுத்தினார்.

 இதன் விளைவாக அக்குழந்தை ஓரளவு நடக்க நடக்க முயற்சித்தது. பின்னர் உன்னால் ஓடவும் முடியும் என்ற தன் நம்பிக்கையை ஊற்றி வளர்த்தார். அதன்காரணமாக அக்குழந்தை ஓட முயற்சித்தது. பின்னர் பாடசாலை மட்டம் மாகாண மட்டம் தேசிய மட்டம் என்று வந்து இறுதியில் ஒரு போலியோ நோயாளி ஒலிம்பிக் செம்பியன் பட்டத்தை வென்றார்.

அதேபோல் 'ஹைபை' என்ற சாதனையாளர் உன்னால் கல்வி கற்க முடியாது என்று  பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டவர். அதன் விளைவாக அவர் எடுத்த சபதம் எனது கனவை நிறைவேற்றுவேன் என்பதாக. இன்று அவரது கனவுக்கு சாட்சியாக ஹைபை கோபுரம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 இதேபோல் ஆபிரகாம் லிங்கனின் வரலாறு. இப்படி பல மேதைகளை நாம் அடுக்கிக்கொண்டு போகலாம். எனவே என்னாலும் முடியும் என்று நினைக்க வேண்டும். முயற்சிக்க வேண்டும். அதற்கு தாய் அடிக்கடி ஆசிர்வதிக்க வேண்டும். இதுவே வரலாறாகும்.

தற்போது முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் காலம். நோன்பு மூலம் பல இலட்சியங்களை அடைய முடியும். அதிகமாக நோன்பு காலத்தில் ஏழை வரியை வழங்குவார்கள். மனதிற்கான பல்வேறு பயிற்சிகளை நோன்பு வழங்குகிறது. இப்படியான விடயங்களை முன் உதாரணமாகக் கொண்டு செயற்படும் போது வெற்றி எற்படுகிறது. வறுமை விரட்டப்படுகிறது.

அடுத்ததாக ஒருவனது கல்விக்கு வறுமையை தடையாகக் கருதக் கூடாது. வறுமையிலும் சாதனை படைத்த பல வரலாறுகள் உண்டு. இன்று கல்விக்காக பலர் உதவ முன்வந்துள்ளதைக் காண்கிறோம். எனவே கல்வியையே மூலதனமாக்கி அதன் மூலம் வெற்றி பெற முடியும் என்றும் குறிப்பிட்டார்.  


கல்விக்கு வறுமையை தடையாகக் கருதக் கூடாது. வறுமையிலும் சாதனை படைத்த பல வரலாறுகள் உண்டு. கல்விக்கு வறுமையை தடையாகக் கருதக் கூடாது. வறுமையிலும் சாதனை படைத்த பல வரலாறுகள் உண்டு. Reviewed by Madawala News on 6/04/2017 11:38:00 AM Rating: 5