tg travels

உயிருக்கு அச்சுறுத்தல்.. ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை.


மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஞானசார தேரரின் உயிருக்கு  அச்சுறுத்தல் உள்ளதால் , அவர் வெளியே வந்தால் அவர் படுகொலை செய்யப்படுவார் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என அவரது பிரதிவாதி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு சந்தர்ப்பங்களில் அவர் வராமல், மருத்துவ சான்றிதழை வழங்கியதால் இத்தகவல் உண்மையானது அல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஞானசார தேரருக்கு மரண அச்சுறுத்தல் உள்ளதென்பதை மீண்டும் பிரதிவாதி வாதிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜராகமலே இதுபோன்ற நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்தால், அவர் மீது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்ததுடன் ஜூலை 18 வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
உயிருக்கு அச்சுறுத்தல்.. ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை.  உயிருக்கு  அச்சுறுத்தல்.. ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை. Reviewed by Madawala News on 6/12/2017 11:28:00 AM Rating: 5