Ad Space avaiable

நர்ஸ் விழுந்து டாக்டர் உயிரிழந்த சம்பவம்.


கொலம்பியா நாட்டில் பிரபலமான vally நகரில் டெல்வாலி பல்கலைக்கழக போதனா ஆஸ்பத்திரி இருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியின்  6வது மாடியில் பயிற்சி பெறுகின்ற நர்ஸ் மரியா இசபெல் கான் சலேஷ் என்பவர் எதிர்பாராத விதமாக திடீரென மாடியிலிருந்து கீழே  விழுந்தார்.

அவர் விழுகையில்  ஆஸ்பத்திரி வளவின் வெளியே அந்த ஆஸ்பத்திரியின் டாக்டரான  முபியோஷ்  நடந்து சென்று கொண்டிருந்தார். என்னே விதி...! மாடியிலிருந்து விழுந்த நர்ஸ் மரியா இசபெல் சரியாக  டாக்டர்  முபியோஷ் மீதே  விழுந்தார். இச்சம்பவத்தில்  படுகாயம் அடைந்த இருவரையும் ஊழியர்கள் மீட்டு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால்,  சிகிச்சை பலனின்றி டாக்டர்  முபியோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் நர்சு மரியா  உயிர்பிழைத்துள்ளார். அவர் தற்போது தொடர்ச்சியாக ஆஸ்பத்திரியில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகிறார்.
நர்ஸ் விழுந்து டாக்டர் உயிரிழந்த சம்பவம். நர்ஸ் விழுந்து டாக்டர் உயிரிழந்த சம்பவம். Reviewed by Madawala News on 6/16/2017 09:34:00 PM Rating: 5