tg travels

பாகிஸ்தான் அசத்தல் வெற்றி.. இறுதிப்போட்டிக்கு தெரிவானது.



இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று வேல்ஸ் தலைநகர் கார்டிப்பில் நடக்கும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து , பாகிஸ்தான் அணிகள் மோதின

 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது 'பவுலிங்' தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் காயத்தால் (முதுகுப்பகுதி) அவதிப்படும் முகமது ஆமிர் நீக்கப்பட்டு, ருமான் வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கப்பட்டு பேர்ஸ்டோவ் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் (13) ஏமாற்றினார். பேர்ஸ்டோவ் (43), ஜோ ரூட் (46) அரைசத வாய்ப்பை இழந்தனர். கேப்டன் மார்கன் (33) நிலைக்கவில்லை. பட்லர் (4), மொயீன் அலி (11), அடில் ரஷித் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் (34) அணியை கைவிட்டார்.இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 211 ரன்னுக்கு சுருண்டது
.பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 3 விக்கெட் கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, பகார் ஜமான் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த பகார் ஜமான் அரைசதமடித்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த அசார் அலி, தன்பங்கிற்கு அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்க 118 ரன்கள் சேர்த்த போது பகார் ஜமான் (57) அவுட்டானார்.

பாகிஸ்தான் அணி 37 ஓவரில் 2 விக்கெட் இழந்து  215 ஓட்டங்கள் பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது.
பாகிஸ்தான் அசத்தல் வெற்றி.. இறுதிப்போட்டிக்கு தெரிவானது. பாகிஸ்தான் அசத்தல் வெற்றி.. இறுதிப்போட்டிக்கு தெரிவானது. Reviewed by Madawala News on 6/14/2017 09:52:00 PM Rating: 5