Ad Space avaiable

நீங்கள் எங்களுடன் உள்ளீர்களா? கத்தாருடன் உள்ளீர்களா? பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கேள்வி.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

நீங்கள் எங்களுடன் உள்ளீர்களா அல்லது கத்தாருடன் உள்ளீர்களா? என பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கேள்வி எழுப்பி உள்ளது.

அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும் ஒன்று. இந்த நாட்டுடன் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை 5 அரபு நாடுகள் மேற்கொண்டுள்ளன. தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.

கத்தார் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்கவும் தடை விதித்துள்ளது. மேலும் கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொண்டது. இதனால் கத்தார் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கத்தார் பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துவிட்டது. இப்போது அந்நாட்டிற்கு தேவையான உணவு பொருட்களை ஈரான் அனுப்பி வருகிறது.

இவ்விவகாரத்தில் துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கத்தாருக்கு ஆதரவாக உள்ளன. இந்நிலையில் உங்களுடைய ஆதரவு யாருக்கு என பாகிஸ்தானிடம் சவுதி அரேபியா கேள்வி எழுப்பி உள்ளது.

கத்தார் விவகாரத்தில் ராஜதந்திர ரீதியிலான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பாக சவுதி அரேபியா சென்று உள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப். அப்போது சவுதி அரேபியா அரசர் சல்மானை நவாஸ் செரீப் சந்தித்து பேசிஉள்ளார்.

இருநாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பின் போது, நீங்கள் எங்களுடன் உள்ளீர்களா அல்லது கத்தாருடன் உள்ளீர்களா? என நவாஸ் செரீப்பிடம் சவுதி அரேபியா அரசர் சல்மான் கேள்வி எழுப்பியதாக பாகிஸ்தான் மீடியாவான எக்ஸ்பிர்ஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டு உள்ளது.

பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என நவாஸ் செரீப் கூறியதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
நீங்கள் எங்களுடன் உள்ளீர்களா? கத்தாருடன் உள்ளீர்களா? பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கேள்வி. நீங்கள் எங்களுடன் உள்ளீர்களா? கத்தாருடன் உள்ளீர்களா? பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கேள்வி. Reviewed by Madawala News on 6/14/2017 09:22:00 PM Rating: 5