tg travels

மற்றுமொரு பன்னிப்பிட்டிய மாணவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை.



கொழும்பு கோட்டையில் இருந்து அவிஸ்ஸாவலை நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொட்டாவ புகையிரத நிலையத்தின் அருகாமையில் குறித்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகுபுர பன்னிபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சென்ற  வாரம்  புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்த   பேராதெனிய   பல்கலைக்கழக   மாணவியும்  பன்னிபிடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
மற்றுமொரு பன்னிப்பிட்டிய மாணவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை. மற்றுமொரு பன்னிப்பிட்டிய மாணவி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை. Reviewed by Madawala News on 6/15/2017 12:36:00 PM Rating: 5