Kidny

Kidny

வன்முறைக்கு எதிரான கவிதைக் குரல்கள்!


அளுத்கம கலவரம் முதல் இன்று வரையான முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்செயல்கள் குறித்து கவிதைகளாக எழுந்த எதிர்க்குரல்களைப் பதிவு செய்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வகையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வலைத்தளங்கள், சமூக ஊடகங்களில் வெளிவந்த எதிர்க்குரல் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி வெளியிடுவதற்காக அவ்வாறான கவிதைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

எமக்கு அனுப்பி வைக்கப்படும் கவிதைகள் மாத்திரமே நூலுக்கென ஏற்றுக் கொள்ளப்படும். தனிப்பட்ட முறையில் யாரிடமும் கவிதைகள் கோரப்படா. இன்று படைப்பாக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இணையத் தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் இணைந்திருக்கிறார்கள், படிக்கிறார்கள், எழுதி வருகிறார்கள். இக்கவிதைகள் முஸ்லிம் படைப்பாளிகளால் மட்டுமே படைக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

வெளியீட்டுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முன்வருவோரிடமிருந்து கிடைக்கும் பணத்தொகையே புத்தகத்தின் பக்கங்களைத் தீர்மானிக்கும் என்பதையும் கவிதைகளைத் திருத்தியமைக்கவோ சுருக்கவோ தொகுப்பாளருக்கு உரிமை உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளக் கோருகிறோம்.

எனவே உங்களது கவிதைகளை (பிரசுரமானதாயின் விபரங்களுடன்) பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு :  ashroffshihabdeen@gmail.com

வன்முறைக்கு எதிரான கவிதைக் குரல்கள்! வன்முறைக்கு எதிரான கவிதைக் குரல்கள்! Reviewed by Madawala News on 6/12/2017 03:40:00 PM Rating: 5