tg travels

முறுகல் நிலையே பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு காரணம்... போலிஸ் விசாரணையில் தகவல்.


பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு காரணம் வெளியாகி உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெரியகடை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும். அப்பிரதேசத்தில் உள்ள குழு ஒன்றுக்கும் இடையில் தொடர்ந்து நிலவிவந்த முறுகல் நிலையே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், கடந்த 3ஆம் திகதி திருகோணமலை, பெரியகடை பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் பள்ளிவாசலின் சொத்துக்கள் பல சேதமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முறுகல் நிலையே பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு காரணம்... போலிஸ் விசாரணையில் தகவல். முறுகல் நிலையே பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு காரணம்... போலிஸ் விசாரணையில் தகவல். Reviewed by Madawala News on 6/12/2017 02:29:00 PM Rating: 5