Kidny

Kidny

கத்தாரில் இலங்கையர்களுக்கான இப்தார் நிகழ்வும் - சமகால இலங்கை அனர்த்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும்.


இலங்கையின் தொடர்ச்சியான மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் இடம்பெற்ற அனர்த்தங்களை ஆராய்வதோடு அது பற்றிய கலந்துரையாடல்களுக்காக  கத்தாரில் உள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று 01 ஜூன் வியாழக்கிழமையும், நாளை 02 ஜூன் வெள்ளிக்கிழமையும் இப்தார் நிகழ்வோடு இந்த அனர்த்தங்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந் நிகழ்வை கத்தாரில் உள்ள இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றினைக்கப்பட்ட நிறுவனம் (FSMA)  ஒருங்கினைத்துள்ளது. முஸ்லிம் மக்களது பிரச்சினைகளுக்காக சகல கத்தாரில் உள்ள அமைப்புகளோடும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைந்து, முடிவுகளை மக்கள் நலன் கருதி செயற்படுவது அமைப்பின் நோக்காகும்.

மேற்படி நிகழ்வுக்கு அஷ்ஷெய்க் எ.சி அகார் முஹம்மது அவர்களின் சிறப்புரையும் நடைபெறவுள்ளதோடு இலங்கை முஸ்லிம்களுக்கான விசேட துஆ பிரார்த்தனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 01 வியாழக்கிழமை கலீபா மைதானத்திற்கு முன்னால் அஷீஷியா பகுதியில் உள்ள இப்தார் கூடாரத்திலும், ஜூன் 02 வெள்ளிக்கிழமை அல் அரபி விளையாட்டு கழகத்திலும் இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திறந்த அழைப்பு என்பதாலும் இலங்கை முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் நாட்டு மக்களின் நலன் கருதி நடைபெறவுள்ள நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

மேலதிக தகவல்களுக்கு
Mohammed Lafir (6665 4344), Shahard Nazir (5547 1723), Mohamed Akram (5598 3589),
Azeem (5598 9514),
Manar Mansoor (5574 7512)
Mohammed Aslam (5019 0136)

அட்டாளைச்சேனை அஸ்லம் கத்தாரிலிருந்து-

கத்தாரில் இலங்கையர்களுக்கான இப்தார் நிகழ்வும் - சமகால இலங்கை அனர்த்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும். கத்தாரில் இலங்கையர்களுக்கான இப்தார் நிகழ்வும் - சமகால இலங்கை அனர்த்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும். Reviewed by Madawala News on 6/01/2017 09:42:00 AM Rating: 5