Ad Space avaiable

இலங்கையில் தீவிரவாதத்தை பரப்ப கட்டார் நிதியுதவி: பொதுபல சேனா குற்றச்சாட்டு.



- A.R.A. பரீல் -
கட்டார் இலங்­கையில் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு ஓர் முஸ்லிம் அமைச்சர் மூலம் நிதி உதவி வழங்கி வரு­கி­றது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் நாம் முறை­யிட்டு வந்­தமை இன்று உறு­தி­யாகி விட்­டது.

கட்­டா­ரி­லி­ருந்து பெறப்­பட்ட பணம் தீவி­ர­வா­தத்­துக்கே பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

நேற்று ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், முன்னாள் ஜனா­தி­ப­திக்கு கட்­டா­ரி­யி­லி­ருந்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மூலம் கிடைத்து வரும் நிதி உதவி பற்றி விளக்­க­மாக கடிதம் ஒன்று எழு­தி­யி­ருந்தோம்.

வில்­பத்து குடி­யேற்­றங்கள் பற்றி முறை­யிட்­டி­ருந்தோம்.

இந்த நிதி­யு­தவி உடன்­ப­டிக்­கையில் அர­சாங்கம் கையொப்­ப­மி­ட­வில்லை. நிதி­யு­தவி அர­சாங்­கத்தின் ஊடாக வழங்­கப்­ப­ட­வு­மில்லை. வில்­பத்­து­வுடன் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சரே கையொப்­ப­மிட்டார்.

அந்த அமைச்சர் மஹிந்­த­ரா­ஜபக்ஷ காலத்தில் வகித்த அதே அமைச்சுப் பத­வி­யையே தற்­போ­தைய அர­சிலும் வகிக்­கிறார்.

கட்டார் உலக இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. நிதியுதவிகளை வழங்கி வருகிறது என்பது இப்போது உறுதியாகி விட்டது என்றார்.
இலங்கையில் தீவிரவாதத்தை பரப்ப கட்டார் நிதியுதவி: பொதுபல சேனா குற்றச்சாட்டு. இலங்கையில் தீவிரவாதத்தை பரப்ப கட்டார் நிதியுதவி: பொதுபல சேனா  குற்றச்சாட்டு. Reviewed by Madawala News on 6/07/2017 12:41:00 PM Rating: 5