Kidny

Kidny

உதவிபுரிந்த அனைவருக்கும், பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மக்கள் நன்றி தெரிவிப்பு.


எம்.எல்.எஸ்.முஹம்மத் - இரத்தினபுரி 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மக்கள் தொடர்பில் நிவாரண உதவிகள் வழங்கிய அனைவருக்கும் மற்றும் பல்வேறு வகையிலும் இம்மக்களுக்கு உதவிபுரிந்த அனைவருக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர் .

குறிப்பாக இம்முறை ஏற்பட்ட வெள்ள அனர்த்தம்,மண்சரிவு,அதிக மழை மற்றும் ஏனைய பொது அனர்த்தங்களால் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் 2933 குடும்பங்களும் 11836 தனிநபர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.அத்து டன் 69 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 430 வீடுகள் அனர்த்தங்களினால் பாதிப்படைந்துள்ளன.

கடந்த 2003 ஆம் ஆண்டில்  ஏற்பட்ட வெள்ளத்தை விடவும் மிகக் கூடுதலான அளவில் இரத்தினபுரி மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்திய  இவ்வெள்ளத்தினால்  இரத்தினபுரி மாநகர  எல்லைக்குள் வசிக்கும் அதிக அளவிளான முஸ்லிம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக இரத்தினபுரி ஜென்னத் ஜும்ஆ மஸ்ஜித் பிரிவில் 550 குடும்பங்களும் கொடிகமுவ பகுதியில் 240 குடும்பங்களும் படுகெரத மற்றும் திருவானகெட்டிய பகுதியில் 185 குடும்பங்களும் இரத்தினபுரி கொழும்பு வீதியில் வசிக்கும் 110 குடும்பங்களும் மற்றும் மிஹிந்துகம மஹவெலவத்தை பகுதிகளில் 120 முஸ்லிம் குடும்பங்களும் இம்முறை வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  இரத்தினபுரி முஸ்லிம் தரப்பினர்கள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.10 கோடிக்கும் மேற்பட்ட இரத்தினபுரி முஸ்லீங்களின் சொத்துக்களுக்கு பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

எனினும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி முஸ்லிம் மக்களுக்கு அரசினால் கிடைக்கபெற்ற நிவாரணங்களை விடவும் இரத்தினபுரி பகுதிகளில் உள்ள மஸ்ஜிதுகள் மூலமாகவே அதிகமான நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இரத்தினபுரி ஜென்னத் ஜும்ஆ மஸ்ஜித் உட்பட இரத்தினபுரியில் உள்ள பல மஸ்ஜிதுகள் முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக உணவுகளை வழங்கியதுடன் போதிய தங்குமிட வசதிகளையும் செய்துகொடுத்திருந்தது.அத்துடன் மஸ்ஜிதுகளில் அம்மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து . இதேபோல் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண உதவிகளும் மஸ்ஜித்கள் ஊடாகவே முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

வெள்ளம் முற்றாக நீங்கிய பின்னர் மஸ்ஜிதுகளால் அனுப்பி வைக்கப்பட்ட நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த குழுக்கள் மூலமாக முஸ்லிம் வீடுகள் , கால்வாய்கள்,பாதைகள் மற்றும் வீட்டு பாவணைப் பொருட்கள் பாடசாலைகள் , மஸ்ஜிதுகள், முஸ்லிம் வியாபார நிலையங்கள்  அனைத்தும் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டன.

இரத்தினபுரி முஸ்லீங்களுக்கான மேற்படி அனைத்து நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகள் யாவும் இரத்தினபுரி மாவட்ட  ஜம்மியத்துல் உலமா , இரத்தினபுரி ஜென்னத் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக சபை , இரத்தினபுரி முஸ்லிம் வாலிப அமைப்புக்கள் , இஸ்லாமிய தஃவா அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் இரத்தினபுரி முஸ்லிம் சமூக முக்கியஸ்தர்கள் அனைவருடைய பூரண ஓத்துழைப்புடன் கீழ் இயங்கிய இரத்தினபுரி முஸ்லிம் அனர்த்த முகாமைத்துவ கழுவினால் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டு வந்துள்ளன.அத்துடன் இக்குழுவின் மேற்பார்வையின் கீழ் வெளிப் பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நிவாரண உதவிகளும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்ட இரத்தினபுரி முஸ்லிம் மக்கள் தமக்கு உதவி செய்த மேற்படி அனைவருக்கும் மற்றும் இலங்கையின் நாலா பாகங்களில் இருந்தும் தாராளமாக நிவாரண உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய சூரா சபையின் அனர்த்த முகாமைத்துவக் குழு,கொள்ளுபிட்டி ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் , பேருவலை பள்ளிவாசல் சங்கம் , கண்டி மாவட்ட ஜம்மியத்துல் உலமா கிளை உட்பட ஏனைய கிளைகள் ,மேர்சி லங்கா நிறுவனம் , இலங்கை ஜெமாதே இஸ்லாம் அமைப்பு ,எம்.எப்.சீடி நிறுவனம் , எஸ்ஆர் அமைப்பு மற்றும் ஏனைய அனைத்து இஸ்லாமிய நிறுவனங்கள் உட்பட தனி நபர்கள் அனைவருக்கும் இரத்தினபுரி முஸ்லிம் மக்கள் தமது ஆழ்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர் .

அத்துடன் இரத்தினபுரி மக்களின் நலன்கள் தொடர்பாக கவனிப்பதற்கு ஜனாதிபதி அவர்களால் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட கௌரவ அமைச்சர் றிஷாட்  பதியுத்தீன் மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி போத்தாகம  உட்பட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்ட இரத்தினபுரி முஸ்லிம் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர் .
உதவிபுரிந்த அனைவருக்கும், பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மக்கள் நன்றி தெரிவிப்பு. உதவிபுரிந்த அனைவருக்கும், பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மக்கள் நன்றி தெரிவிப்பு. Reviewed by Madawala News on 6/15/2017 10:36:00 AM Rating: 5