Kidny

Kidny

சைட்டம் (SAITM) எதிர்ப்பு பற்றியதொரு சிறு கண்ணோட்டம்...!


நீதிமன்றத் தீர்ப்பையும் மீறித் தொழிற்படுகின்ற இலங்கையிலுள்ள வைத்தியர்களும் வைத்தியத்துறை மாணவர்களும் ஞானசாரவை விடவும் கேவலமானவர்கள்.

இவர்களைக் கைது செய்ய முதலில் விசேட படைப்பிரிவினை நாட்டில் உருவாக்குதல் காலத்தின் கட்டாயத் தேவை. இலங்கையில் தனியார் மருத்துவத்துறைக்கு இடமளித்தால் தமது பந்தாக்களுக்கும் உழைப்புக்கும் வழியிருக்காது என்று அஞ்சுகின்றனர்.

தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் கற்கும் மருத்துவமனையின் தகுதி பற்றியெல்லாம் பேசுவது வெறும் வெளிவேசங்களுக்காக மாத்திரமே. இலங்கையின் அரச பல்கலைக்கழஙகளிலிருந்தும் இன்று வருடா வருடம் தகுதியற்ற வெறும் சான்றிதழ் மருத்துவர்கள் கனிசமானோர் வெளியாகாமலில்லை.

இலங்கை மருத்துதுறையை எடுத்துக்கொண்டால் ஏற்படுகின்ற மரணங்களுக்கு மருத்துவத்தின் தரம் என்பதை விடவும் மருத்துவர்களின் எண்ணிக்கை போதாமையே மிகப்பிரதான காரணம் என பல்வேறு ஆய்வறிக்கைகள் தெளிவாகக் கூறுகின்றன.

அப்படியிருக்க நாட்டுக்குத் தேவையான எண்ணிக்கையிலான மருத்துவர்களை அரச பல்கலைக்கழகங்களால் உருவாக்க முடியாத நிலையில் தனியார் மருத்துவப்பல்கலைக் கழகத்தின் தேவை இன்றியமையாததொன்றாகும். ஆனால் அரச செலவில் இலவசமாகப் படித்த இவர்களோ இன்று தேசத்தில் அக்கறையின்றி சுயநலங்களுக்காக கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு இவர்கள் வெளியிடுகின்ற காரணங்களில் சிறிதும் உண்மை கிடையாது. இத்தனைக்கும் இவர்கள் நாட்டு மக்களில் அக்கறை கொண்டு அரச மருத்துவமனைகளில் நோயாளிகளை ஆரத்தழுவி அருமருந்து கொடுக்கும் புண்ணியவான்கள் கிடையாது என்பது நாட்டுக்கே தெரியும்.

ஆனால் தமக்கு நிகரானவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்குமானால் தங்களால் ஏழைகளை ஏமாற்றி உழைக்க முடியாமல் போய்விடும் என்பதும் தமது மருத்துவ வியாபாரத்திற்கு போட்டி அதிகரித்தால் தங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதும் சீதனச் சந்தையில் தாம் மலிவுப் பொருளாகிவிடுவோம் என்பதுமே இவர்களது அடிமனதிலிருக்கும் அச்சம்.

இவற்றை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்பதனால் வேறு வேறு காரணங்களைச் சொல்லி போர்க்கொடி தூக்குகிறார்கள். தனியார் மருத்துவத்துறைகளுக்கு அனுமதி வழங்கியுள்ள ஏனைய நாடுகளில் இலங்கையை விடவும் மருத்துச் சேவை ஒப்பீட்டு ரீதியில் நன்றாகவே இருக்கிறது. அவர்கள் இமாலய அளவில் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களோ குண்டாஞ்சட்டிக்குள்தான் இன்னும் குதிரையோடிக் கொண்டிருக்கிறார்கள் வெறும் பெனடோலும் கையுமாக...!

நீங்க என்ன ஆட்டம் போட்டாலும் உங்க பருப்பு கௌரவ ரணில் விக்ரமசிங்கவிடம் வேகாது இலவச வைத்திய மக்காள்ஸ்.....!

ரா.ப.அரூஸ்
23.06.2017

சைட்டம் (SAITM) எதிர்ப்பு பற்றியதொரு சிறு கண்ணோட்டம்...! சைட்டம் (SAITM) எதிர்ப்பு பற்றியதொரு சிறு கண்ணோட்டம்...! Reviewed by Madawala News on 6/24/2017 04:13:00 PM Rating: 5