Kidny

Kidny

தீவிரவாதத்தை பரப்புவதாக குற்றம் சாட்டி சவூதி அரேபியா வெளியிட்ட நிறுவனங்கள் மற்றும் 59 நபர்களின் பெயர் விபரம் இதோ.


- ரஸானா மனாப் -
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணி சேர்ந்து தீவிரவாதத்தை பரப்புவதற்கு துணைபோனவர்கள் என்றும் நிதியுதவி செய்தவர்கள் என்றும் குற்றம் சாட்டி 59 தனி நபர்களையும், 12 நிறுவனங்களையும் பட்டியல் படுத்தி வெளியிட்டிருப்பதன் ஊடாக மத்திய கிழக்கு அரசியல் சூடான ஒரு கட்டத்தை எட்டியிருக்கின்றது.

கட்டாருக்கும் ஏனைய கூட்டணி நாடுகளுக்கும் இடையில் பழையபடி உறவை புதுப்பிப்பதற்காக வேண்டி குவைட் எமிர் சபாஹ் அல் அஹமட் இரண்டு நாட்களுக்கு முன்பு களத்தில் இறங்கியிருந்தார், சவூதி அரேபியாவுடன் பேச்சுவாரத்தை நடத்திவிட்டு அடுத்த நாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்தடைந்த அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர்களுடனும் பேச்சுக்கள் நடத்திவிட்டு அன்றிரவே கட்டார் போய் நேற்று கட்டார் ஆட்சியாளரை சந்தித்து பேசியிருந்தார்.

இதனிடையில் கட்டார் மற்றும் சவூதி அரேபிய கூட்டணி நாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வெள்ளை மாளிகை வரும்படி கட்டார் ஆட்சியாளருக்கு ட்ரம்ப் விடுத்த அழைப்பை கட்டார் ஆட்சியாளர் தமீம் பின்த் ஹமாத் நிராகரித்திருந்த நிலையில் மேற்சொன்ன பட்டியலை கூட்டணி நாடுகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த கூட்டணி வெளியிட்டிருக்கும் பெயர் பட்டியலில் உள்ள தனி நபர்களில்.., 

எகிப்து - 26
கட்டார் - 18
லிபியா - 5
குவைட் - 3
ஜோர்தான் - 2
பஹ்ரைன் - 2
யெமனி - 1
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 1
சவூதி - 1
என 59 நபர்களும்


நிறுவனங்களின் பட்டியலில்..., 

பஹ்ரைனை சேர்ந்த நிறுவனங்கள் - 6

கட்டாரை சேர்ந்த நிறுவனம் - 5

லிபிய நிறுவனம் - 1
என 12 நிறுவனங்கள் அடங்குகின்றன.

தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்தார்கள் என்று கூறி பெயர் வெளியிடப்பட்டிருக்கும் 59 நபர்களுள் யூசுப் அல் கர்ளாவியும் ஒருவர், சில ஊடகங்களும் தனி நபர்களும் கர்ளாவியை உயர்த்தி பிடித்து அவரை மட்டுமே இந்த நாடுகள் தீவிரவாத செயற்பாட்டை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டியிருப்பது போன்று மாயையை ஏற்படுத்தி பதிவுகளை இட்டிருப்பது வரவேற்க கூடிய விடயமல்ல. இது தனிப்பட்ட நாடுகளின் மீதுள்ள மிகுந்த எரிச்சலையும், விரோததன்மையையும் வெளிக்காட்டி நிற்கின்றது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும் விதண்டாவாத பட்டுக்கொண்டும் நிற்பதில் நமக்கு எதுவித நன்மைகளும் ஏற்பட போவதில்லை.

அவர்களின் பெயர் பட்டியல் கீழே இருக்கின்றது.


1. கலீபா முஹம்மத் துருக்கி அல் சுபை - கட்டார்


2. அப்துல் மலிக் முஹம்மத் யூசுப் அப்துல் சலாம் - ஜோர்தான்.


3. அஷ்ரப் முஹம்மத் யூசுப் உத்மான் அப்துல் சலாம் - ஜோர்தான்.


4. இப்ராஹீம் ஈசா அல் ஹாஜி முஹம்மட் அல் பாக்கீர் - கட்டார்


5. அப்துல் அசீஸ் பின் கலீபா அல் அதியாஹ் - கட்டார்


6. சலீம் ஹசன் கலீபா ரசீத் அல் குவாரி - கட்டார்.


7. அப்துல்லாஹ் கனீம் முஸ்லீம் அல் ஹவார் - கட்டார்.


8. சாத் பின் சாத் முஹம்மட் அல் ஹாபி - கட்டார்


9. அப்துல் லதீப் பின் அப்துல்லாஹ் அல் குவாரி கட்டார்.


10. முஹம்மத் சயீத் பின் ஹெல்வான் அல் சக்தாரி - கட்டார்.


11. அப்துல் ரஹ்மான் பின் ஒமைர் அல் நுஐமி - கட்டார்.


12. அப்துல் வஹாப் முகம்மட் அப்துல் ரஹ்மான் அல் ஹெமைக்கானி - யெமன்


13. கலீபா பின் முஹம்மட் அல் ரப்பான் - கட்டார்.


14. அப்துல்லாஹ் பின் காலீத் அல் தானி - கட்டார்


15. அப்துல் ரஹீம் அஹ்மட் அல் ஹரம் - கட்டார்.


16.ஹஜ்ஜாஜ் பின் பஹத் ஹஜ்ஜாஜ் முஹம்மட் அல் அஜ்மீ - குவைட்


17. முபாரக் முஹம்மட் அல் அஜி - கட்டார்.


18. ஜாபிர் பின் நசீர் அல் மாரி - கட்டார்.


19. யூசுப் அப்துல்லாஹ் அல் கர்ளாவி - எகிப்து.


20. முஹம்மத் ஜெசீம் அல் சுல்தானி - கட்டார்


21. அலி பின் அப்துல்லாஹ் அல் சுவைதி - கட்டார்


22. ஹாசிம் ஸாலெஹ் அப்துல்லாஹ் அல் அவாதி - கட்டார்.


23. அலி முஹம்மத் முஹம்மத் அல் சலபி - லிபியா


24. அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜ் - லிபியா.


25. மஹ்தி ஹராதி - லிபியா


26.இஸ்மாயீல் முஹம்மத் முஹம்மத் அல் சலபி - லிபியா.


27. அல் ஸாதிக் அப்துல் ரஹ்மான் அலி அல் குரைனி - லிபியா.


28. ஹமாத் அப்துல்லாஹ் அல் புதைஸ் அல் மாரி கட்டார்.


29. முஹம்மத் அஹமத் சௌக்கி இஸ்லாம்பௌலி - எகிப்து.


30. தாரிக் அப்துல் மஹ்ஜூத் இப்ராஹீம் அல் சுமோர் - எகிப்து.


31. முஹம்மத் அப்துல் மக்சூத் முஹம்மத் அபீபி -எகிப்து.


32. முஹம்மத் எல் சாஹிர் அப்துல் ரஹீம் முஹம்மத் - எகிப்து.


33. வஜ்தி அப்துல் ஹமீத் முஹம்மத் கொனீம் - எகிப்து.


34. ஹசன் அஹமட் ஹசன் முஹம்மட் அல் டோக்கி அல் ஹௌதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.


35. ஹக்கீம் அல் ஹுமைதி அல் முத்தாரி - சவூதி.


36. அப்துல்லாஹ் முஹம்மத் சுலைமான் அல் முஹைசீன் - சவூதி.


37. ஹமாத் அப்துல் அஹமட் அல் அலி - குவைட்


38. ஐமன் அஹமட் அப்துல் ஹனி ஹஸ்னைன் எகிப்து.


39. அசீம் அப்துல் மாஜித் முஹம்மத் மாதி - எகிப்து.


40. யஹ்யா அகில் சல்மான் அகீல் - எகிப்து.


41. முஹம்மத் ஹமாதா அல் சயித் இப்ராஹீம் - எகிப்து.


42. அப்துல் ரஹ்மான் முஹம்மத் சுக்ரி - எகிப்து.


43. ஹுசைன் முஹம்மத் ரெஸா இப்ராஹீம் யூசுப்


44. அஹமட் அப்துல் ஹபீப் மஹ்மூத் அப்துல் ஹாதி - எகிப்து.


45. முஸ்லீம் பௌத் தப்றான் - எகிப்து.


46. ஐமன் மஹ்மூத் சாதிக் ரிபாத் - எகிப்து.


47.முஹம்மத் சயீத் அப்துல் நயீம் - எகிப்து.


48. முஹம்மத் சயீத் அப்துல் முத்தலிப் அப்துல் ரசாக் - எகிப்து.


49. அஹமத் புவாத் அஹமத் காத் - எகிப்து.


50. அஹமத் ரஜப் ரஜப் சுலைமான் - எகிப்து.


51. கரீம் முஹம்மத் முஹம்மத் அப்துல் அசீஸ் - எகிப்து.


52. அலி சக்கி முஹம்மத் அலி - எகிப்து


53. நஜீப் இப்ராஹீம் எஸௌலி - எகிப்து.


54. செஹாத்த பாத்தி ஹபீஸ் முஹம்மத் சுலைமான் - எகிப்து.


55. முஹம்மத் முஹர்ரம் பஹ்மி அபு சயித் - எகிப்து.


56. அம்ர் அப்துல் நஸீர் அப்துல் ஹக் அப்துல் பாரி - எகிப்து.


57. அலி ஹசன் இப்ராஹீம் அப்துல் சஹீர் - எகிப்து.


58. முர்தாதா மஜீத் அலி சிந்தி - பஹ்ரைன்


59. அஹமட் அல் ஹசன் அல் தஸ்கி - பஹ்ரைன்.

தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில்..,
1. கட்டார் வொலண்டியர் சென்டர் - கட்டார்.


2. டோஹா அப்பிள் கம்பனி - கட்டார்.


3. கட்டார் சாரிட்டி - கட்டார்


4. ஷேக் ஈத் அல் தானி சாரிட்டி பௌண்டேஷன் - கட்டார்


5. மனித உரிமை சேவைகளுக்கான ஷேக் தானி பின் அப்துல்லாஹ் பௌண்டேசன் - கட்டார்


6. சராய டிபன்ட் பெங்காசி - லிபியா


7. சராயா அல் அஸ்தார் - லிபியா


8. பெப்ருவரி 14 கொலிஷன் - பஹ்ரைன்


9. த ரெசிஸ்டன்ஸ் பிரிகேட்ஸ் - பஹ்ரைன்


10. ஹிஸ்புல்லாஹ் பஹ்ரைன் - பஹ்ரைன்.


11. சராயா அல் முக்தார் - பஹ்ரைன்.


12. ஹர்கத் அஹ்ரார் பஹ்ரைன் - பஹ்ரைன்.
ஆகியவைகளும் அடங்குகின்றன.
- ரஸானா மனாப் -

தீவிரவாதத்தை பரப்புவதாக குற்றம் சாட்டி சவூதி அரேபியா வெளியிட்ட நிறுவனங்கள் மற்றும் 59 நபர்களின் பெயர் விபரம் இதோ. தீவிரவாதத்தை பரப்புவதாக குற்றம் சாட்டி சவூதி அரேபியா வெளியிட்ட நிறுவனங்கள் மற்றும் 59 நபர்களின் பெயர் விபரம் இதோ. Reviewed by Madawala News on 6/09/2017 02:15:00 PM Rating: 5