Kidny

Kidny

முஸ்லிம்களின் பள்ளிவாயல் உட்பட அடிப்படை விடயங்களில் கை வைத்ததால்தான் மகிந்தவை தோற்கடிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள்.


-அனா-

நல்லாட்சியில் திருகோணமலை மலையாவெளி பெரியகடை ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்தப்பட்டுமானால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கே லங்கா சொலூசன் நிறுவனத்தின் அறிமுகமும் இப்தார் நிகழ்வும் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

திருகோணமலை மலையாவெளி பெரியகடை ஜும்ஆ பள்ளிவாயல் தாக்குதல் என்பது சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்குள் பல குழப்பங்களை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்ற என்ற சந்தேகம் எங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெற்றோல் குண்டு வீசப்பட்ட இடமானது முஸ்லிம்களால் கன்னியமிக்கப்படுகின்ற ஒரு மதஸ்தலம் இதில் கை வைத்தால் எந்த அளவு விபரீதம் ஏற்படும் என்பதை கடந்த அரசாங்கத்தில் பார்த்திருந்தோம்.

முஸ்லிம்களின் பள்ளிவாயல் மற்றும் அடிப்படை விடயங்களில் கை வைத்ததன் காரணத்தால் தான் மகிந்த அணியை மாற்றுகின்ற விடயத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள்.

வடக்கு கிழக்கு பகுதியில் புலிகள் காலத்தில் முஸ்லிம்கள் பட்ட கஷ்டங்களும் இன்னல்களும் நமக்கு தெரியும். இவ்வாறு இன்னல்களை பெற்றுக் கொண்டிருந்த நாங்கள் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அபிவிருத்திகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை முஸ்லிம்களின் அடிப்படையில் முஸ்லிம்களின் அடிப்படையில் கை வைத்து ஆதரவு கொடுத்தமையால் ராஜபக்ஷவை தூக்கி எறிகின்ற அளவிற்கு மக்கள் ஒன்றுபட்டார்கள்.

இந்த நல்லாட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கட்டவிழ்த்தப்பட்டு அந்த தாக்குதலுக்குரிய சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படாமல் விடப்படுவதென்பதும், சட்டம் அதனுடைய செயற்பாட்டை செய்யவிடாமல் தடுப்படுகின்ற விடயங்கள் என்பனவும் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதற்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் பள்ளிவாயல் உட்பட அடிப்படை விடயங்களில் கை வைத்ததால்தான் மகிந்தவை தோற்கடிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாயல் உட்பட அடிப்படை விடயங்களில் கை வைத்ததால்தான்  மகிந்தவை தோற்கடிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள். Reviewed by Madawala News on 6/05/2017 05:37:00 PM Rating: 5