Ad Space avaiable

கல்குடா ஷியாக்களினுடைய அலுவலகம் உடைப்பு சம்பந்தமாக ஷியாக்கள் வெளியிட்ட ஊடக அறிவிப்பு.


-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
சவூதி அரசாங்கம் எங்களுடைய நாட்டில் நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம்கள் வாழ்வதாக கூறுகின்றது. ஆனால் அங்கே பதினைந்து
வீதத்துக்கும் அதிகமானோர் ஷியா முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஷியாக்களும் முஸ்லிம்கள் என சவூதியே பகிரங்கமாக ஏற்றுகொள்கின்றது. ஷியாக்கள் இஸ்லாமிய அகீதாவிற்கு மாற்றமாக நடப்பவர்கள் என்றால் சவூதி அரசாங்கமானது தனது நாட்டில் வாழ்பவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம்கள் என எதன் அடிப்படையில் கூற முடியும்.?

உலக நாடுகளை எடுதுக்கொண்டால் குர்- ஆனையும் அஹ்லுல் பைத்தினரையும் பின்பற்றுகின்ற மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

ஷியாக்கள் சவூதி, குவைத், கட்டார், போன்ற நாடுகளில் பரவலாக வாழ்ந்து வரும் ஒரு முஸ்லிம் சமூகமாகவே இருக்கின்றது. அவ்வாறு ஷியாக்கள் இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாட்டு நடக்கின்ற காபிர்கள் என்றால் எதற்காக சவூதி அரசாங்காமானது ஷியாக்களை ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய புனிதஸ்தலமான மக்காவிற்குள் ஹஜ்ஜு  கடமையினை நிறைவேற்றுவதற்கு அனுமடியளிக்க வேண்டும் என தாருள் இமாம் ஜெளபர் சாதிக் பணிமனையின் பணிப்பாளரும், கல்குடா அஹ்லுல் பைத் ஜமாத்தினருடை (ஷியா) தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஹலீம் மெளலவி தெரிவிக்கின்றார்.

கடந்த 2017.06.08ம் திகதி கல்குடா பிரதேசத்தில் ஷியாக்களின் முக்கிய அலுவலகமாக இருந்த இஸ்லாமிய கல்வி கலாச்சரார நிலையமானது பொதுமக்களால் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விடயம் சம்பந்தமான நேர்காணலின் பொழுதே ஹலீம் மெளலவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த ஹலீம் மெளலவி… சவூதி அரசாங்கமானது இஸ்லாத்திற்கு மாற்றமானவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாதவர்களை ஹஜ்ஜு கடமையினை நிறைவேற்ற செல்தற்கோ அல்லது புனிதஸ்தலங்கள் அமைந்துள்ள பிரதேசத்திற்குள் காலெடி எடுத்து வைக்கவோஅனுமதிப்பதில்லை.

 ஆகவே சவூதி அரசாங்கமானது ஷியாக்களை ஹஜ்ஜு கடமையினை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கின்றது என்றால்.! ஷியாக்கள் றசூல் (ஸல்) அவர்கள் கூறியதனை போன்று குர்- ஆனையும் அஹ்லுல் பைத்தினரையும் விட்டுச்செல்கின்றேன் என்ற ஹதீசிற்கு அமைவாக இஸ்லாமிய அகீதாவிற்கு உட்பட்டு குர்-ஆனையும் ஹதீசினுடைய எதார்தத்தினை புரிந்து செயற்படுகின்றவர்களாக இருப்பதினலாகும்.

பொதுவாக ஷியா கொள்கையினை உடையவர்கள் யூதர்களின் முழுமையான வழிகாட்டலில்தான் தங்களது கொள்கையினை இஸ்லாமிய அகீதாவிற்கு முற்றிலும் முரண்பாடான நிலையில் மக்கள் மயப்படுத்துவதால் உங்களை காபிர்கள் எனவும், வழிகேட்டில் உள்ளவர்கள் என அழைகப்படுவதற்கும், கல்குடா பிரதேசதில் உங்களுடைய இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாடான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதுமே இவ்வாறு நீங்கள் இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படுவதற்கும் முக்கிய காரணம் என பரவலாக தெரிவிக்கப்படுவது சம்பந்தமாக் உங்களுடைய கருத்து என்ன.? என்ற கேள்விக்கே ஹலீம் மெளலவி மேற் கண்டவாறு பதிலளித்தார்.
மேலும் கல்குடா அஹ்லுல் பதைத் ஜமாத்தின்(ஷியா) தலைவர் ஹலீம் மெளலவியிடம் கேட்கப்பட்ட கேள்விகளான…..

01-கடந்த எட்டாம் திகதி உங்களுடைய இஸ்லாமிய கல்வி கலாச்சார நிலையமானது தாக்கப்பட்ட விடயத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?
02- தெளஹீத்த மற்றும் வஹாபிச கொள்கையினை சேர்ந்தவர்கள்தான் குறித்த நிலையத்தினை அடித்துடைத்ததாக எதனை ஆதாரமாக வைத்து அவர்கள் மீது பகிரங்கமாக குற்றம் சுமர்த்துகின்றீர்கள்.?

03- குறித்த இஸ்லாமிய நிலையமானது இஸ்லாமிய அகிதாவிற்கு முரண்பாடான நிலையில் கொள்கையினை பரப்புவதாகவும், ரமழான் மாததில் தேவைக்கு அதிகமாக ஒலி பெருக்கிகளை பாவித்ததினால்தான் பொதுமக்களால் உடைக்கப்பட்டதாக கூறப்படுகின்றதே.?

04- கல்குடா பிரதேசத்தில் ஷியாக்கள் என முத்திரை குத்தப்பட்டு நீங்கள் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டம்படுவதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறு ஷியாக்கள் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படுகின்றமைகான முக்கிய காரணம் எதுவென நீங்கள் நினைக்கின்றீர்கள்.?

5- நீங்கள் இஸ்லாமிய அகீதாவிற்குள் உட்பட்டுதான் உங்களுடைய கொள்கையினை மக்கள் மயப்படுத்துகின்றீர்கள் என்றால்.? கடந்த எட்டாம் திகதி உங்களுடைய அலுவலகம் உடைக்கப்பட்டமைக்கு எதிராக கல்குடா மக்கள் ஏன் கிளர்ந்தெழவில்லை.?

06- யூத சாம்ராஜ்ஜியத்தின் வழிக்காட்டலிலும் அதன் பின்னணியிலும்தான் பொதுவாக ஷியா கொள்கையினை உடையவர்கள் செயற்படுகின்றார்கள் என உலகலாவிய ரீதியிலே உங்கள் மீது ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களால் குற்றம் சுமர்த்தப்படுகின்றதே.?

07- முக்கியமாக சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் ஈவிரக்கமின்ற கொன்றொழிக்கப்படுவதற்கு ஷியாக்களே முக்கிய காரணம் என உங்கள் கொள்கையாளர்கள் மீது குற்றம் சுமர்த்தப்படுவது சம்பந்தமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள்.?

08- இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினருக்கும் உங்களுடைய அமைப்பினருக்கும் இடையிலான உறவு எவ்வாறு இருக்கின்றது.?

09- கல்குடா பிரதேசத்தில் ஷியாக்களின் அகீதாவிற்கு முரண்பாடான செயற்பாடுகள் அதிகரித்துவருது சம்பந்தமாக ஏனைய பிரதேசங்களில் இருந்தும் உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் கல்குடாவினை நீங்கள் மையப்படுத்தி உங்களுடைய கொள்கையினை பரப்புவதற்கான முக்கிய காரணம் என்ன.?

10-இவ்வாறன பல கேள்விகளுக்கு உங்களுகு சார்பான கருத்துக்களை தெரிவிக்கின்ற நீங்கள் பல்லின சமூகங்கள் வாழுகின்ற எமது நாட்டில் கருத்து சுதந்திரம், மத சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இருக்கின்ற நிலையில் பகிரங்கமாக உங்களுடைய கருத்துக்களை இது வரைக்கும் நீங்கள் மக்கள் மயப்படுத்தாமைக்கான காரணம் என்ன.?

11- ஈரான் நாட்டில் இருந்து பெரும் தொகையான நிதி உங்களுக்கு கைமாறப்பட்டு உங்களுடைய கொள்கையினை பரப்புவதற்காக அவைகள் பயண்படுத்தப்படுவாதாக உங்கள் அமைப்பு மீது குற்றம் சுமர்த்தப்படுகின்றதே.?

12- ஏனைய இஸ்லாமிய அமைபுக்களை போன்று நீங்களும் உங்களுக்குள் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை தெளிவுபடுத்துவதற்காக பொது மேடை ஒன்றில் ஏனைய இஸ்லாமிய அமைப்புகளையும் அழைத்து பகிரங்க விதாம் ஒன்றினை இன்னும் நடத்தாமைக்கான காரணம் என்ன.?

13- ஈரான், ஈராக், போன்ற நாடுகளில் முஹர்ரம் மாதம் வருகின்ற பொழுது ஹுசன் (ரழி) அவர்களை ஞாபகப்படுத்துவதற்காக ஷியாக்கள் தங்களுடைய மேனியினை கூறிய ஆயுதங்களால் கீறிக்கொண்டு முற்றிலும் இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பட்ட நிலையில் செயற்படுவது சம்பந்தமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள்.?

14- உங்கள் அமைப்பின் மீது சுமர்த்தப்படுகின்ற முக்கிய குற்றச்சாடான அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களுடைய மகளும் ரசூ(ஸல்) அவர்களுடைய மனைவியுமான ஆயிஷா (ரழி) ஆவர்களை ஷியாக்கள் பகிரங்மாக தூற்றுவதாகவும், இஸ்லாத்தின் அடிப்படையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில் விமர்சிப்பதாகவும் கூறும் விடயத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

15- கல்குடா பிரதேசத்தில் ஷியா கொள்கையினை பரப்புபவர்கள் திட்டமிட்டு ஏனைய இஸ்லாமிய அமைப்பினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து ஒரு குடும்பத்தினையே ஷியா கொள்கையினை உடைய குடும்பமாக மாற்றுகின்றார்கள் என்ற குற்றாச்சாட்டு உங்கள் மீது சுமர்த்தப்படுகின்றதே.?

16-அத்தோடு உங்களுடைய வழி காட்டலில் கல்குடா பிரதேசத்தில் இயங்குகின்ற மன்பஹுல்; ஹுதா அறபி கல்லூரியில் வெளியாகுகின்ற மெளலவிமார்கள் ஆசியர் நியமனங்களை பெற்று தாக்அள் கற்பிக்கும் பாடசாலைகளில் அலி (ரழி) அவர்களை முன்னிலைப்படுத்தி இளம் வயதிலிருந்தே மாணவர்களை ஷியா வழிகேட்டுக்குள் உள்வாங்குவதாக உங்கள் அமைப்பின் மீது குற்றம் சுமர்த்தப்படுவது சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன.?

17-உங்களுடைய உடைக்கபப்டட் அலுவலகமும், அறபு கல்லூரியும் அமைந்துள்ள இடமானது தெளஹீத், ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக் போன்ற ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களை பின்பற்றி நடக்கின்ற மக்கள் அதிகளவில் வாழுகின்ற பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன.? ஏன் நீங்கள் வாழைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கு உங்களுடைய  செயற்பாடு சார்ந்த அலுவலங்களை நிறுவவில்லை.?

19- எட்டாம் திகதி உடைக்கப்பட்ட உங்களுடைய அலுவலகத்தில் மறு நாள் ஒன்பதாம் திகதி வேள்ளிக்கிழமை பிரதேசத்தில் புதிய ஜும்மா தொழுகைக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் உடைப்பிற்கு காரணம் என பேசப்படுகின்றதே.?

20- ரமழான் மாதத்தில் கடைசி வெள்ளி கிழமைகளில் ஷியாக்களால் பாலஸ்தீன புனித பூமியினை மீட்பது என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்படுகின்ற குத்ஸ் தினமானது முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கான ஒரு செயற்பாடு என உங்களுக்கு எதிரானவர்கள் கருத்துக்களை முன்வைப்பது சம்பந்தமாக உங்களுடைய கருத்து என்ன.?

21- அண்மையில் காட்டார் நாட்டுக்கு எதிராக சவூதி அராபியா உட்பட ஐந்து முஸ்லிம் நாடுகள் தடைகளை விதித்திருகின்றது. இதற்கு கட்டார் ஈரானுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருப்பதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

22- கல்குட்ட பிரதேசத்தில் மிகவும் குறைந்தளவிலான எண்ணிகையினுடைய உங்களுடைய கொள்கையினை சார்ந்தவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சனைகள் சமூத்தின் மத்தியில் ஏற்படாமல் இருப்பதற்கு ஏனைய இஸ்லாமிய அமைப்புகளுடன் எவ்வாறான செயற்பாடுகள், மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்க் இருக்கின்றீர்கள்.?

போன்ற முக்கிய கேள்விகள் கல்குடாவில் ஷியாக்களின் முக்கிய அலுவலகமாக இருந்த இஸ்லாமிய கல்வி கலாச்சரார நிலையமானது பொதுமக்களால் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான கேட்கப்பட்ட பொழுது அதற்கு தாருள் இமாம் ஜெளபர் சாதிக் பணிமனையின் பணிப்பாளரும், கல்குடா அஹ்லுல் பைத் ஜமாத்தினருடை (ஷியா) தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஹலீம் மெளலவியினால் வழங்கப்பட்ட பதில்களின் விரிவான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கல்குடா ஷியா தலைவருடனான நேர்காணல் :-
கல்குடா ஷியாக்களினுடைய அலுவலகம் உடைப்பு சம்பந்தமாக ஷியாக்கள் வெளியிட்ட ஊடக அறிவிப்பு. கல்குடா ஷியாக்களினுடைய அலுவலகம் உடைப்பு சம்பந்தமாக ஷியாக்கள் வெளியிட்ட ஊடக அறிவிப்பு. Reviewed by Madawala News on 6/15/2017 02:39:00 PM Rating: 5