tg travels

பெண் போலீசுக்கே இந்த நிலைமையா ?


சேவை முடிந்த பின் தனது சக பொலிஸ் தோழியர்களுடன் தங்குமிடம் நோக்கி சென்று கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்ட பிள் ஒருவரின் உடம்பில் இடித்து விட்டு, அது தொடர்பில் கேட்டபோது அந்த பெண் கான்ஸ்டபிளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை கொட் டாஞ்சேனை பொலிஸார் கைதுசெய்துள் ளனர். 

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை ஆமர் வீதி சந்திக்கு அருகில் இடம்பெற் றுள்ளதாகவும், ஆள் நடமாட்டம் இல்லா தபோது இந்தச் சம்பவம் பதிவாகியுள்ள தாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட் டபோது அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி வான்  உத்தரவிட்டார். சிலாபம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் அறிய முடிவதாவது, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உமேஷா எனும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் அவரது சக தோழியர் இருவருடன்  கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தங்குமிடத்தை நோக்கி சேவை முடிந்து நடந்து சென்றுள்ளனர். 

 நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சன நட மாட்டம் இல்லாத நிலையில், இம்மூவரும் ஆமர் வீதி சந்தியை தாண்டி செல்லும்போது, நபர் ஒருவர் திடீரென உமேஷாவின் உடம்பில் இடித்துள்ளார். இதன்போது குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், ஏன் இடித்துவிட்டு செல்கிறாய் என அந்நபரைப் பார்த்து  கேட்டு ள்ளார். அதற்கு  'நான் யாரென்று தெரியுமா' என கேட்டவாறே அந்தப் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் கன்னங்களில் அறைந்துள் ளார்.

 இதனால் அவர் நிலைகுலைந்துள் ளார். பாதையால் சென்ற பலரும் இந்த தாக்குதலை பார்த்துள்ள நிலையில், அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

எனினும் சுதாகரித்துக்கொண்டு உடனடி யாக தனது சக தோழியருடன் சேர்ந்து அந் நபரை மடக்கிப் பிடித்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அவருக்கு எதிராக முறைப்பாடும் அளித்துள் ளார். இதனையடுத்தே அவரை நேற்று பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்செய்ததுடன் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டது.

பெண் போலீசுக்கே இந்த நிலைமையா ? பெண் போலீசுக்கே இந்த நிலைமையா ? Reviewed by Madawala News on 6/06/2017 12:01:00 PM Rating: 5