tg travels

சட்டத்தையும் ஓழுங்கையும் செயற்படுத்த முடியாவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் இவ்வரசையும் புறக்கணிக்கும் நிலை தோன்றலாம்.


தற்போதைய நிலையில் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட இவ்வரசு தவறுமாயின் எதிர்காலத்தில் தற்போதைய அரசை புறக்கணிக்கும் அபாயகரமான நிலை தோன்றுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கூறினார்கள்.

கொலொன்னாவை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் மூலம் ஆகக் கூடியளவு பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு 1650 பயிற்சி புத்தகப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.  

சட்டமும் ஒழுங்கும் நாடெங்கிலும் நிலை நிறுத்தப்படுவதற்காக மக்கள் ஜனநாயக ரீதியாக இந்நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவினார்கள். இரண்டு வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலையில் நிலைநிறுத்தப்பட்ட ஜனநாயகம் மீண்டும் உடைந்து வீழ்ந்துள்ளதா அல்லது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய நிறுவனங்கள் செயலிழுந்துள்ளனவா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஓவ்வொரு நாளும் கடையொன்றிற்கோ அல்லது வணக்கஸ்தலமொன்றிற்கோ தீ வைக்கப்படுகின்றது அல்லது அவற்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்படுகின்றது அல்லது வேறு ஏதாவதொரு நிகழ்வு அரங்கேறுகிறது. இவ்வாறான நிலையில் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய நிறுவனங்கள், இவ்வாறான விடயமொன்று நடந்தேறியவுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் 'கூடிய வோல்டேஜை கொண்ட மின்சாரம் தாக்கியுள்ளது அல்லது காப்புறுதியை பெற்றுக் கொள்வதற்காக உரிமையாளர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்' எனக் கூறுகின்றன.
'
உண்மையாகவே, அரசிற்கோ அல்லது பொலீஸிற்கோ இவ்வாறான நிகழ்வுகளை  கட்டுப்படுத்த முடியாவிட்டால் கடந்த அரசாங்கம் கற்றுக் கொண்டவைகளை இவ்வரசும் கற்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த அரசு இயக்க ரீதியாக அரச அனுசரணையுடன் இனத்துவேஷ மற்றும் தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி மதம் மற்றும் இனங்களுக்கு மத்தியில் குழப்பங்களை தோற்றுவித்து இந்நாட்டை ஒரு இரத்த ஆறாக்க முயற்சி மேற்கொண்டது. அவ்வாறு செய்ததனால் தான் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நம்பிக்கையுடன் இவ்வரசை நிறுவினார்கள்.

ஆனால் இன்று அதே குழுக்கள் மீண்டும் தலையைத் தூக்கி அரசாங்கத்தால் கட்டுப்டுத்த முடியாத நிலையில் செயற்படுவது மிகவும் பயங்கரமான விடயம். சட்டம் மற்றும் ஒழுங்கு நடைமுறைப்படுத்தல், ஒவ்வொருவரும் தத்தமது மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை மற்றும் ஏனையோருக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு சுதந்திரமாக வாழ்தல் ஆகியவைகளை மீண்டும் காண அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்.

எனினும், இந்நிலை மீண்டும் சிதறிப் போகும் நிலையொன்றே தற்பொழுது உருவாகியுள்ளது. விசேடமாக, ஒவ்வொரு நாளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகள் நிகழ்வதாயிருந்தால், பொலீஸாரால் அவைகளை கட்டுப்படுத்த முடியாதிருப்பின், சட்டமும் ஒழுங்கும் செயற்படுத்தப்படாவிடின் ஜனநாயகத்தை எதிர்ப்பார்க்கும் இலங்கை மக்கள்  எதிர்காலத்தில் இவ்வரசாங்கத்தையும் புறக்கணிப்பார்கள் என அவர் மேலும் கூறினார்.

சட்டத்தையும் ஓழுங்கையும் செயற்படுத்த முடியாவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் இவ்வரசையும் புறக்கணிக்கும் நிலை தோன்றலாம். சட்டத்தையும் ஓழுங்கையும் செயற்படுத்த முடியாவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் இவ்வரசையும் புறக்கணிக்கும் நிலை தோன்றலாம். Reviewed by Madawala News on 6/13/2017 02:24:00 PM Rating: 5