Kidny

Kidny

சொகுசு வேனில் திருட்டு மாடுகளை கடத்தி வந்தவர்கள் சிக்கினர்.



கல்கமுவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் மாடுகளை திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள சொகுசு வேன் ஒன்றையும் அண்மையில் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள சொகுசு வேன், கண்டி பிரதேசத்தில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிலையம் ஒன்றில் இருந்து பெற்று கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பல பிரதேசங்களில் கடத்திய மாடுகளை மாத்தளை – யட்டவத்தை பிரதேசத்திற்கு கொண்டு சென்று கொலை செய்து இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ள நிலையில், அங்கிருந்து 14 மாடுகளினது தோல், எலும்புகள், மண்டை ஓடுகள் ஆகியவற்றை காவற்துறை கைப்பற்றியுள்ளதாக   தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபர் மஹவ – ரன்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவருடன் ஏனைய சந்தேக நபர்கள் இருவரும், மீகலேவ - உஸ்கல, சியம்பலாண்டுவ - வீரகொல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது
சொகுசு வேனில் திருட்டு மாடுகளை கடத்தி வந்தவர்கள் சிக்கினர். சொகுசு வேனில் திருட்டு மாடுகளை கடத்தி வந்தவர்கள் சிக்கினர். Reviewed by Madawala News on 6/13/2017 11:06:00 AM Rating: 5