tg travels

மாணவர்களின் தொழுகை கடமைக்காக கல்முனை அஸ்–சிராஜில் பள்ளிவாயல் திறந்து வைப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்)     

பாடசாலை மாணவர்களின் ஆன்மீக மேன்பாட்டையும் இறைவழிபாடு மற்றும் ஒழுக்க விழுமியங்களை மேன்படுத்துவதனையும் நோக்காகக்  கொண்டு அல்–அவ்னுல் கைரி இஸ்லாமி நிறுவனத்தினால் கல்முனை கொளனி அஸ்–சிராஜ் மகா வித்தியாலயத்தில் கட்டி முடிக்கப்பட்ட மஸ்ஜித் உமர் பள்ளிவாயல் மாணவர்கள் மற்றும் அயலவர்களின் நலன்கருதி அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பள்ளிவாயல் திறப்பு விழா நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அல்–அவ்னுல் கைரி இஸ்லாமி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எஸ்.ஏ.எம்.பர்ஹான் (ஸலபி) கலந்து கொண்டதோடு, பாடலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் தொழுகை கடமைக்காக கல்முனை அஸ்–சிராஜில் பள்ளிவாயல் திறந்து வைப்பு. மாணவர்களின் தொழுகை கடமைக்காக கல்முனை அஸ்–சிராஜில் பள்ளிவாயல் திறந்து வைப்பு. Reviewed by Madawala News on 6/03/2017 09:42:00 AM Rating: 5