Ad Space avaiable

கொள்ளைக் காரர்களாக மாறிய பிரபல பாடசாலை மாணவர்கள். போலீசில் சிக்கியதில் வெளியாகும் தகவல்கள்.


கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாடசாலை மாணவர்கள் மூவரை, மிரிஹான விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலான இந்த மூன்று மாணவர்களும், வாடகை வாகனங்கள் வழங்கும் சேவை நிலையங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, வாடகை வாகனங்களைப் பெற்றுக்கொண்டு, வாடிக்கையாளர்கள் போன்று பாவனை செய்து, பாதி தூரம் செல்லும் போது, வாகனத்தின் சாரதியைக் கத்தி முனையில் மிரட்டி, அவரிடமுள்ள நகை, பணம் மற்றும் அலைபேசி ஆகியவற்றைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுபோன்று பல சம்பவங்களை, இவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளனர்.

இவர்களில் இருவர், கிருலப்பனைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஹொரண பகுதியில் பிரபல பாடசாலையில் கல்விப்பொதுத் தராதர உயர்தரத்தில் கல்வி கற்று வருவதாகவும், மற்றொருவர், ஒழுக்கமற்று நடந்துக்கொண்டமையால், பாடசாலையை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளவர் என்றும் தெரியவருகின்றது. கைது​ செய்யப்பட்ட மூவரும், 18 வயதைக் கொண்டவர்கள்.

மற்றுமொரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு தயாராக, கிருலப்பனை பகுதியில் நின்று கொண்டிருந்த குறித்த மூ​வரையும், பொலிஸார் கைது செய்துள்ளனர். கஞ்சா மற்றும் மற்றைய போதைப்பொருட்கள், சொகுசான ஹொட்டல்களில் உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களுக்காக, இந்த மாணவர்கள், இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் வெகுநாட்களாக ஈடுபட்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், இதுவரைக்கும் சுமார் 600,000 ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகள், பணங்களைக் கொள்ளையடித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 7 அலைபேசிகள், 3 கத்திகள், ஒரு திருகாணி முடுக்கி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கொள்ளைக் காரர்களாக மாறிய பிரபல பாடசாலை மாணவர்கள். போலீசில் சிக்கியதில் வெளியாகும் தகவல்கள். கொள்ளைக் காரர்களாக மாறிய பிரபல பாடசாலை மாணவர்கள். போலீசில் சிக்கியதில் வெளியாகும் தகவல்கள். Reviewed by Madawala News on 6/05/2017 04:39:00 AM Rating: 5