Kidny

Kidny

வாட்சப் மற்றும் பேஸ்புக்கில் சுத்தும் " இன்னுமா கட்டார நம்புற" என்ற பதிவுக்கு பதிலடி.


"இன்னுமா கட்டார நம்புற" இப்படி ஒரு போஸ்ட் வட்சப் பேஸ்புக் எல்லாத்துலயம் சுத்துது...

"கட்டாரில் இஸ்ரேல் தூதரகம்" இருக்கிறது.
"அமெரிக்கன் பேஸ்" இருக்கிறது என்று அந்தப்பதிவு தொடர்கிறது....
எல்லாம் இருக்கட்டும்.....

எந்த முஸ்லிம் நாட்டினது ராஜதந்திர கொள்கையிலும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன அதற்கு கட்டார் மட்டும் விதிவிலக்கல்ல....

கட்டாரில் இன்னும் சில முரண்பாடான விடயங்களும் இருக்கின்றன.

கட்டாரில் ஷியாக்களுக்கு தனியான பள்ளி வாயில் இருக்கின்றது...
மத்திய கிழக்கில் தப்லீக் மர்கஸ் இருப்பது கட்டாரில் மட்டும்தான் என்று நினைக்கின்றேன்... யூசுப் அல் கர்ளாவியும் கட்டாரில்தான்
இருக்கிறார்...

இப்போது கட்டார் ஷியாக்களை ஆதரிக்கிறது, அல்லது தப்லீக் ஜமாத்தை
கையில் வைத்திருக்கிறது, இஹ்வான்களுக்கு துனைபோகிறது, என்று பல தலைப்புகளில் நிறுவல்களுடன்  கட்டுரை எழுதலாம்....

நிற்க..

இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொருத்தவரையில் ஒவ்வொரு குடும்பதிலும் ஒரு இளைஞர் கட்டாரில் இருக்கிறார்.

எமது சமூகத்தில் ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்த, சகோதரிகளை கரை சேர்க்க  கட்டார் ரியால் உதவிபுரிந்து இருக்கிறது.

தொழில் இல்லாமல் அல்லது குறைந்த ஊதியத்துக்கு இலங்கையில் கஷ்டப்பட்ட அதிகமான இளைஞர்களுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கையை கட்டார் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது....

முஸ்லிம் ஊர்களில் கட்டப்பட்டிருக்கும் அதிகமான வீடுகளில் கட்டார் ரியாலின் வாசனை இருக்கத்தான் செய்யும்....
கட்டாரை நம்பி நமது ஆயிரக்கணக்கான  இளைஞர்கள் தமது உயர்கல்விக்காக  முதலீடு செய்திருக்கிறார்கள்....

சரளமாகச் சொல்லப் போனால் எமது சமூகத்தில் அதிகமான வீடுகளில்
அடுப்பெரிவதற்கு கட்டார் ரியாலின்  பங்களிப்பு அளப்பரியது.

கட்டார் பொருளாதார ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ ஒரு பாரிய வீழ்சியை சந்தித்தால் நமது ஒவ்வொரு குடும்பத்திலும் அது நிச்சயம் தாக்கம் செலுத்தும். எத்தனையோ குடும்பங்களின்  கனவுகள் சிதைக்கப்படும்..

கட்டார் நம் அனைவருக்கும் இன்னுமொரு நாடு.
அது நமது சமூகத்தின் ஆயரக்கணக்கான குடும்பங்களை மரியாதையாக வாழவைத்துக் கொண்டு இருக்கும் நாடு.

 கட்டாரின் ராஜதந்திர நடவடிக்கைகளில் முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால்
எமது சமூகத்தின அபிவிருத்தியில் மிக முக்கிய பங்காளரான கட்டாரோடு
 நாம் முரண்படுவது என்பது ராஜ துரோகம்.

கட்டாருக்காக அனைவரும் பிரார்திப்போம்.

- ஷப்வான் பஷீர் -
வாட்சப் மற்றும் பேஸ்புக்கில் சுத்தும் " இன்னுமா கட்டார நம்புற" என்ற பதிவுக்கு பதிலடி. வாட்சப் மற்றும் பேஸ்புக்கில் சுத்தும் " இன்னுமா கட்டார நம்புற" என்ற பதிவுக்கு பதிலடி. Reviewed by Madawala News on 6/07/2017 01:58:00 PM Rating: 5