Kidny

Kidny

மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்கியவர்கள்.


2012ஆம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்ட கிளிநொச்சி கல்மடு குளம் திரைநீக்கம் தொடர்பான நினைவு கல்லில் முன்னாள் ஜனதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர் இனந்தெரியா நபர்களால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 “வடக்கின் துரித மீட்சித்திட்டம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச” என்று எழுதப்பட்டிருந்த திரைநீக்கக் கல்லில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

 வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட இந்தக் குளத்தை அப்போதைய கைதொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் அன்று திரைநீக்கம் செய்யப்பட்டதாவும் எழுதப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரையும் சேதப்படுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்கியவர்கள். மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்கியவர்கள். Reviewed by Madawala News on 6/23/2017 08:01:00 PM Rating: 5