Kidny

Kidny

இலங்கையின் சாதனைப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை .


இலங்கைக்கு பெருமை பெற்று கொடுக்கும் வகையில் 2000ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க தனது பதக்கங்களை ஏலம் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும், இதன் காரணமாக இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது 25 வருட விளையாட்டு வாழ்க்கையில் தற்போது போன்று என்றும் வீழ்ந்து போனதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சின் ஆலோசகராக தனக்கு இதுவரை கிடைத்த சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே தன்னிடம் உள்ள பெறுமதியான சொத்தாக கருதப்படுகின்ற ஒலிம்பிக் பதக்கங்களை ஏலத்தில் இட்டு வாழ்க்கையை நடத்துவதற்கு முயற்சிப்பதாக சுசந்திக்கா ஜயசிங்க மேலும் தெரிவித்துளளார்.
இலங்கையின் சாதனைப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை . இலங்கையின் சாதனைப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை . Reviewed by Madawala News on 6/04/2017 12:28:00 PM Rating: 5